எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மைசூரு, ஆக.31 காங்கிரஸ் பிரமுகர்களை குறித்து வருமான வரித் துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருநாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரு மாவட்டம், ராமகிருஷ்ணா நகரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வருமான வரித் துறையினரை மத்திய அரசு தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி வருகிறது. தேசிய அளவில் காங்கிரசு பிரமுகர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. காங்கிரசு பிரமுகர் விஜய்முளகுந்தாவின் இல்லத்தில் புதன்கிழமை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கருநாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், காங்கிரசு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜக மேற்கொள்ளும் எந்த சலசலப்பிற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner