எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ராமநாதபுரம், ஆக.31 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த நயினார் கோவில் அருகே உள்ள டி. கொடிக்குளத்தில் கருமலையான் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழிபாட்டிற்கு பின்னர் கதவு சாத்தப்பட்டது.

மறுநாள் காலை அர்ச்சகர் வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஜெனரேட்டர்கள், ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி என ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து நயினார் கோவில் காவல்நிலையத்தில், கோவில் நிர்வாகி மலைராஜ் புகார் செய்தார்.

இதே போல் நகரம் கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோவி லுக்குள் புகுந்தவர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக, கோவில் நிர்வாகி பொன்னுச்சாமி, நயினார் கோவில் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த இரு புகார்களையும் ஆய்வாளர் ஜெயசித்ரா விசாரித்து வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner