எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஜாதி ஒழிப்புப் புரட்சி

ஜாதியை ஒழிப்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. பெரியார். ஜாதி இருக்க வேண்டும் என்று கருதியவர்கள், பெரியார் மீது கற்களையும், செருப்புகளையும், அழுகிய முட்டைகளையும் வீசியது உண்டு. அதற் கெல்லாம் பெரியார் அஞ்சவில்லை. தன் கொள்கையில் உறுதியோடு இருந்தார்.

ஜாதிக்கு எதிராக பெரியார் நிகழ்த்திய  சொற்பொழிவுகள், விடுத்த அறிக்கைகள்,  எழுதிய தலையங்கங்கள் இந்தப் பெருநூலில் அடங்கியுள்ளன. தொகுப்பாசிரியர் கி.வீரமணியின் உழைப்பும், ஆற்றலும் பக்கத் துக்குப் பக்கம் பளிச்சிடுகின்றன.

430 பக்கங்கள் கொண்ட இந்த நூல் சிறந்த  கட்டமைப்புடன் கண்ணைக் கவருகிறது.

(வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 84/1, 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7; விலை: ரூ.420)                 நன்றி: 'தினத்தந்தி',  (30.8.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner