எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, செப்.1 நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக சரிவடைந் திருப்பதற்கு, உயர்மதிப்பு ரூபாய் நோட்டு களை ரத்து செய்த மோடி அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என்று காங்கிரசு கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான நிதி காலாண்டில் 5.7 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் சரிவடைந்திருப்பது, இதுவே முதல்முறை ஆகும்.

அதேநேரத்தில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்திலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக் கட்டத்திலும் 6.9 சதவீதமாக பதிவாகி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் சரிவடைந்திருப்பதற்கு, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கையே காரணம் என்று காங்கிரசு கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து டில்லியில் அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா  கூறிய தாவது:

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல் லாததாக்கும் பிரதமரின் பொறுப்பற்ற முடி வும், தவறான கொள்கைகளும், இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியச் சரிவை ஏற் படுத்தியுள்ளது. இதை கடந்த ஏப்ரல் -  -ஜூன் மாதம் வரையிலான காலாண்டு காலகட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல் இதை ஊர்ஜிதப் படுத்துகிறது.

பிரதமரின் கருவத்தாலும், திருத்தங்கள் செய்வதில் தோல்வியடைந்த மற்றும் பிரத மரின் தவறான முடிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் பணியில் மகிழ்ச்சியாக ஈடுபட் டிருக்கும் மத்திய நிதியமைச்சராலும் நமது நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

காங்கிரசு கட்சியின் ஊடகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், 'நாட்டின் பொருளாதார வளர்ச்சி யானது 8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 6 நிதி காலாண்டுகளில், மோடியின் ஆட்சியின்கீழ் நாட்டின் பொருளா தார வளர்ச்சி 9.2 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக சரிவடைந்துவிட்டது.

இதற்கு மதிப்பீடு செய்வதற்கு புதிய அணுகுமுறையை கடைப்பிடித்ததே காரணம். இதுதான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மதிப் பிழக்கச் செய்த திட்டத்துக்கு கிடைத்த வெற்றியா?' என்று சுர்ஜேவாலா கேள்வி யெழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner