எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சண்டிகர், செப்.1 -சாமியார் குர்மீத் ராமின், சிர்சா ஆசிரமத்தில், 1999- - 2002க்கு இடையிலான காலத்தில் 200-க்கும் மேற்பட்டபெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளானதாக புதிய தகவல் வெளியாகி யுள்ளது.

குர்மீத் ராம் மீதான பாலியல் வல்லுறவு வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் டிஅய்ஜி-யுமான நாராயண், இது தொடர்பான தகவல்களை தற்போது வெளிப்படை யாக பகிர்ந்து கொண்டுள்ளார்.தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலை வர் குர்மீத் ராம், தனது பெண் சீடர்கள் 2 பேரை பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்கிய வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்தவன்முறையில் 38க்கும் அதிகமான வர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக் கானோர் காயமடைந்தனர்.

வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக் களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.எனினும், 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு, குர்மீத் ராம்தற்போது சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.இந்நிலையில், குர்மீத் ராம் மீதான விசாரணையின் போது தன்னுடைய குழுவுக்கு குர்மீத் ஆதரவாளர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து, முன்னாள்விசாரணை அதிகாரியான நாராயண் புதிய தகவல் களை தெரிவித்துள்ளார்.குர்மீத் ராம் மீது 2 பெண்கள் மட்டுமே வெளிப்படையாக புகார் அளித்தார்கள் என்றாலும், உண்மையில், சிர்சா ஆசிரமத்தில் குர்மீத்தின் பாலியல் துன்புறுத்த லால் பாதிக்கப்பட்ட பெண் களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகம் என்று கூறி யுள்ளார்.

சிர்சா ஆசிரமத்தில், ராஜபோக வாழ்க்கையை அனுபவித்து வந்த சாமியார் குர்மீத் ராம், ஆசிரமத்தில் ஆணுறைகளின் தொகு ப்பை சேகரித்து வைத்து இருந்தார்; அவரது அறையில் கருத்தடை சாதனங்களும் இருந்தன; அவர் ஒரு மிருகம்போல வெறிபிடித்த வர், 1999 முதல் 2002 வரைதேரா வளா கத்தில் 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ள னர்; ஆனால் பாதிக்கப்பட்ட 10 பெண்களையே சிபிஅய்யால் கண்டறிய முடிந்தது; முடிவாக 2 பெண்களை கொண்டே வழக்குப் பதிவு செய்ய முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

 
இந்நாள்...இந்நாள்...
1971 - மாடர்ன் ரேசனலிஸ்ட் மாத இதழ் துவக்கம்
1980 - சேவியர் தனிநாயகம் அடிகளார் மறைவு
1994-69 சதவிகிதம் பாதுகாப்புக்காக தமிழர் தலைவரின் 31(சி) சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner