எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரியலூர், செப்.2, அரியலூர் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும், ‘நீட்’ தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றும், கிடைக்காமல் போன மருத்துவக் கல்வி கனவானதால் நேற்று (1.9.2017) தற்கொலை செய்துகொண்டார்.

அனிதா மறைவெய்திய அதிர்ச்சித் தகவலை அறிந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (2.9.2017) காலை அரியலூர் அடுத்த குழுமூர் கிராமத்திற்கு விரைந்து சென்று, ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி, அனிதா உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து திராவிடர் கழக அறக்கட்டளையின் சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற தி.மு.க. முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டலத் தலைவர் ஜெயங்கொண்டம் காமராஜ், விடுதலை நீலமேகம், சிந்தனைச் செல்வன், இளந்திரையன், செந்துறை ராஜேந்திரன், விருத்தாசலம் கதிரவன், அறிவு, வெற்றிச்செல்வன், தாம்பரம் இரா.முத்தய்யன், தாம்பரம் நாத்திகன், மற்றும் திரளான கழகத் தோழர் - தோழியர்கள் பங்கேற்று மாணவி அனிதா உடலுக்கு மரியாதை செலுத்தி வீரவணக்கம் செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner