எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிவமொக்கா, செப்.4 சிவமொக்கா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே குழு மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவமொக்கா நகர் துங்காநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறீராமநகர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மற்றொரு சமூகத்தினர் வாழும் தெருவழியாக ஊர்வலம் செல்ல அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு 2 இருதரப்பினர் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு குழு மோதல் உருவானது. இதில் 2 பிரிவினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இச்சம்பவத்தினால் படுகாயம் அடைந்த உதயராவ்(வயது 16), கவுதம்(18), மஞ்சா(17) ஆகிய 3 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து துங்கா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சபீர், முகமது சாதிக், தஸ்தகீர் ஆகிய 3 பேர் கைது செய்தனர். மேலும் இந்த கல்வீச்சு சம்பவம் தொடர் பாக 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner