எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெர்லின், செப்.4 ஆசிய பசிபிக் பிராந் தியத்தில், ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பெர்லினைச் சேர்ந்த 'டிரான்ஸ் பரன்சி இண்டர் நேஷனல்' என்ற ஊழலுக்கு எதிரான தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த விவரங்கள் தெரியவந்ததாக, அந்தப் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், அதிக ஊழல் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, வியத்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இவற்றில், அதிகபட்சமாக, இந்தியா 69 சதவீதம் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் வழங்கும் இடங்கள், காவல் நிலையங்கள், பொது மக்கள் சேவை பெறும் மய்யங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்டோர் லஞ்சம் வாங்குகிறார்கள்.

எனினும், லஞ்சம், ஊழல் ஆகிய வற்றுக்கு எதிரான போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் செல்கிறார். அவரது நடவடிக்கைக்கு 53 சதவீத மக்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். மேலும், சாமானிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று 63 சதவீத மக்கள் நம்புகிறார்கள். ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக, 65 புள்ளிகளுடன் வியத்நாம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான், 40 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில், நான்கில் மூன்று பங்கு அதிகாரிகள் அதிகம் லஞ்சம் வாங்குகிறார்கள். காவல் துறையில் கிட்டத்தட்ட அனைவரும் ஊழல்வாதிகளாக இருக் கிறார்கள். காவல் நிலையம் அல்லது நீதிமன்றங் களுக்குச் செல்பவர்களில், பத்தில் ஏழு பேர் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், இந்த நிலையை மாற்ற முடியும் என்று மக்கள் நினைக்க வில்லை என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத் தில் உள்ள 16 நாடுகளுக்குச் சென்று, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து, 18 மாதங்கள் இந்த ஆய்வினை நடத்தியதாக ‘டிரான்ஸ்பரன்சி இண்டர் நேஷனல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு கடந்த ஆண்டு 168 நாடுகளின் ஊழல் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில், இந்தியா 76 ஆவது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் (2014, 2015), 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா 38-ஆவது இடத்தில் இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner