எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, செப்.5 விநாயகர் சிலை விழா மற்றும் ஊர்வலத்துக்கு பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. உயரம் அதிகமானசிலைகளைவைக் கக் கூடாது. ஊர்வலமாக செல்லும்போது மிகவும் மெது வாக செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படியே வகுக்கப்பட்டிருந்ததாகவும், இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்து இருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த 31- ஆம் தேதி நடந்த ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவு செய் யப்பட்டன. கடைசி நாளான நேற்று நடந்த விநாயகர் ஊர் வலத்திலும் விதிமீறல்கள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தரமணி, தாம்பரம்உள் ளிட்டபல்வேறுகாவல் நிலையங்களில் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

முதல் முறையாக...

எப்போதும் இல்லாத வகையில் முதல் முறை யாக விநாயகர் ஊர்வல விதிமீறல்தொடர்பாகஅதிக எண்ணிக்கையில் காவல்துறை யினர் வழக்குப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner