எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, செப்.5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று சரத் யாதவ் குற்றம்சாட்டினார்.

மத்திய அமைச்சரவை விரி வாக்கம் தொடர்பாக அய்க்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ்,  நேற்று அளித்த பேட்டி வருமாறு:

ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டபோது எங்கள் கட்சி தலைவர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இப்போது, ரிசர்வ் வங்கி புள்ளி விவரம், ஜிடிபி வளர்ச்சி சரிவு ஆகியவற்றை பார்க்கும்போது அவர் எடுத்த முடிவு தவறு என்பது புரிந்திருக்கும். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 2016 நவம்பர் 8 ஆம் நாள் இந்தியாவுக்கு கறுப்பு நாள். பேரழிவை ஏற்படுத்திய நாள். பொருளாதாரத்தை வீழ்த்திய நாள்.கோடிக்கணக்கான வேலை களை அழித்த நாள்.

வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில்மோடிதலை மையிலான மத்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மக்களிடம் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். கருப்பு பணத்தை மீட்போம், ஆண்டுக்கு 2 லட் சம் வேலை வாய்ப்புகளை உரு வாக்குவோம் என்றெல்லாம் கூறி னார்கள். ஒன்றுகூட இன் னும் நடக்கவில்லை என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner