எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை, செப் 7 திமுக எம்எல்ஏக் களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டப் பேரவை உரிமை குழு அனுப்பிய தாக்கீது மீது  நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இடைக்கால தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்ட சபைக்கு அந்த பொட்டலங்களை கொண்டு சென்றனர். தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டு வரக் கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.

சட்டப்பேரவை  உரிமை குழு கூட் டம் கூடியது. அதில் திமுக உறுப்பினர்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி தாக்கீது அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திமுக செயல் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரிமைக் குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார்.

அத்துடன் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய தாக்கீதை எதிர்த்து மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்தார்.

தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் கடைகளில் காவல்துறையினர் உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமைக்குழு தாக்கீது என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அந்த வழக்கானது இன்று (வியாழன்) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்பேது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். இடைக்கால தடை இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி துரைசாமி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைக் குழு தாக்கீது மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபா நாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கானது செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner