எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விழுப்புரம், செப்.7 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமாவை கல்வி அலுவல ரிடம் அளித்தார். விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியை பணியிலிருந்து விலகியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மகனுடன் ஆசிரியை சபரிமாலா போராட்டம் நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒலக்கூரையடுத்த வைரபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார் சபரிமாலா ஜெயகாந்தன். நேற்று காலை வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, தன்  மகன் ஜெயசோஷனுடன் தான் பணிபுரியும் பள்ளியின் முன் அமர்ந்து ’இந்தியா முழுவதும் ஒரே கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் ’நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆசிரியை சபரிமாலா தனியாகப் போராட்டத்தை தொடங்கிய செய்தி காட்டுத் தீயாகப் பரவியதால் ஊர் மக்களும் இளைஞர்களும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கத் தயாரானார்கள்.

ஆனால், அதற்கு முன்பே அந்தத் தகவல் காவல்துறையினருக்குச் சென்றதால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனாலும் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான தனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner