எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, செப்.8  தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப் பினரிடம் சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணையில் தீர்ப்பிற்கு முன் வன்முறையை தூண்டுவதற்காக 5 கோடி ரூபாய் வழங்கியதாக அவ்வமைப்பின் உறுப்பினர்கள் ஒப்புக்கொண் டனர்.

அரியானா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் இரண்டு பெண் களை பாலியில் வன்முறை செய்த குற்றத்திற்காக 20 ஆண் டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப் பட்டார். இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், 38-க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர்.

இந்த கலவர சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், குர்மீத் ராம் ரகீம் சிங் மற்றும் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது, தீர்ப்பு வெளிவந்த நாளன்று அரியானா மாநிலத்தில் வன் முறையை தூண்டுவதற்காக சுமார் அய்ந்து கோடி ரூபாய் அந்த அமைப்பின் மூலம் செல விடப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தேரா சச்சா அமைப்பின் பஞ்ச்குல்லா கிளை தலைவரான சம்கவுர் சிங் என்பவர் மூலம் இந்த பணம் வன்முறையை தூண்டுவதற்காக செலவிடப் பட்டுள்ளது. அவர் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் இருந்து அவர் குடும்பத்துடன் தலை மறைவானார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகினறனர்.

"இது தவிர பஞ்சாப் மாநிலத் திற்கும் வன்முறையை தூண்டு வதற்காக பணம் அனுப்ப பட்டுள்ளது. சம்கவுரை கைது செய்தால் இன்னும் பல தக வல்கள் வெளிவரும். இந்த வன்முறை சம்பவங்களுக்கு மறைமுகமாக உதவியவர்களை கண்காணித்து வருகிறோம்", என அரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் பி.எஸ்.சந்து தெரிவித்துள்ளார்.

சமூக அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக சதி
முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, செப்.8 கருநாட கத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக சதி செய்து வருவதாக அந்த மாநில முதல் வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் நேற்று  செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

'மங்களூரு செல்வோம்' என்ற பெயரில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த பாஜகவினர் முற்பட்டுள்ளனர். இதன்மூலம் சமூக அமைதி, மத நல்லிணக் கத்தை சீர்குலைக்க அக் கட்சி திட்ட மிட்டுள்ளது. இதற்கு காங்கிரசு அரசு வாய்ப்பளிக்காது.

மங்களூரில் பேரணி நடத்து வதாக பாஜக ஏற்கெனவே கூறியிருந்தால், அதற்கு அனுமதி அளித்திருப்போம். முன் அனு மதி பெற்று பாஜகவினர் ஊர் வலம், பேரணி, போராட்டம் நடத்துவதில் எங்களுக்கு எவ் வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இரு சக்கர வாகன ஊர்வலத்தின் மூலம் மாநிலத்தில் நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முற்பட்டுள்ளது.

இதனால்தான் ஊர்வலத் துக்கு அரசு அனுமதி அளிக்க வில்லை. ஜனநாயகத்தில் போ ராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது பொதுமக்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாக இருக் கக் கூடாது. அமைதி, நல்லி ணக்கத்தை பாதுகாப்பதில் காங்கிரசு அரசு அக்கறையாக உள்ளது. எனவே, மாநிலத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்க பாஜகவை அனுமதிக்க மாட்டோம்.

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர் பான வழக்கை சிபிஅய் விசார ணைக்கு ஒப்படைப்பதில் மாநில அரசுக்கு எவ்வித தயக் கமும் இல்லை. இந்த விவகாரத் தில் மாநில அரசு திறந்த மன துடன் இருக்கிறது. சிபிஅய் விசாரணைக்கு ஒப்படைக்க மாட்டோம் என்று அரசு கூற வில்லை. கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் விரும்பினால் இந்த வழக்கை சிபிஅய் விசார ணைக்கு ஒப்படைப்பதாக அவ ரது குடும்பத்தினரிடம் தெரிவித் துள்ளேன். தனது பத்திரிகையில் சங் பரிவார் குறித்து அவ மதிக்கும் கருத்துகளை எழு தாமல் இருந்திருந்தால், கவுரி லங்கேஷ் கொலை செய்யப் பட்டிருக்க மாட்டார் என்று பாஜக எம்எல்ஏ ஜீவராஜ் கூறியிருக்கிறார்; அதில் உள்ள அர்த்தம் என்ன என்பது புரிந்து கொள்ளமுடிகிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner