எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, செப். 8 மருத்துவ மாண வர் சேர்க்கையில் 'நீட்' தேர்வு கூடாது என்று அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியில் மாணவர்களின் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டு தேர்வு முறையிலும் அதே பாகுபாடு களைக் கொண்டிருக்கக் கூடிய தேர்வாக 'நீட்' உள்ளது. ஆகவே, மத்திய அரசும், மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டும் என்று சரத் யாதவ் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது:

மாநில அரசுகளின்  கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலை யீட்டை தவிர்க்கும் வண்ணம்  நாடாளுமன்றத்தில் புதிய சட்டத் துக்கான தேவை ஏற்படுமானால், புதிய சட்டத்தையும் கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வால் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டு 19 வயது பெண் (அனிதா) தற்கொலை செய்துகொண்டார்.

ஒரே தேர்வு என்று  நடத்தப் படுகின்ற நீட் தேர்வு பெரிய அளவில் தவறுகளைக் கொண்டுள் ளதாகவும், பலவகைகளிலும் பாகுபாடுகளைக் கொண்டதாகவும் இருக் கிறது. இந்தியா முழுவதும் பல் வேறு பாடத்திட்டங்கள்  உள் ளன. நீட் தேர்வைக் கட்டாய மாக்கித் திணிப்பதன்மூலம் பாகு பாடுகளையும் திணிக்கின்றது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தேர்வை நடத்துவதன்மூலமாக மாநில கல்வித்திட்டங்களில் வாய்ப்புகளை மறுப்பதாக உள் ளது.

மாநில பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் சிபிஎஸ்இ அடிப்படையிலான பாடத்திட்டத் தின்படி நடத்தப்பெறுகின்ற நீட் தேர்வில் போட்டி போடுவதற்காக தனிப்பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இது மீண்டும் மீண்டும் பாகுபாடான  நடைமுறையையே கொண்டுள்ளது. பொருளா தாரத்தில் பின்தங்கியுள்ள மாண வர்களை கருத்தில் கொள்ளாத நிலையே உள்ளது. நீட் தேர்வின் முடிவு பயிற்சி வகுப்புகளை வணிகநோக்கில் பெருக்குவதற்கே வழி வகுத்துள்ளது. இதனால், ஏழை   மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள். ஆகவே, ஒரே தேர்வு என்பது ஒழிக்கப்பட வேண்டும்.

மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டிய மருத்துவ, பொறியியல் மாணவர் சேர்க்கைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தில் சட்டம் இயற்றப்பட வேண் டும்.
இவ்வாறு சரத் யாதவ் குறிப் பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner