எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடமுழுக்கு விழாவில் 13 பெண்களிடம் 100 பவுன் நகைகள் பறிப்பு

தூத்துக்குடி, செப்.9 தூத்துக்குடியில் அமைந் துள்ள  சங்கரராமேசுவரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் தூத்துக்குடி மீனாகானா தெருவை சேர்ந்த சண்முகம்மாள் (வயது 60) என்பவர்  கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை சிலர் பறித்து சென்றுவிட்டனர்.  இது குறித்து அவர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையத்தில் புகார் கூறினார்.

இதையடுத்து காவல்துறை சம்பவ இடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் வல்லநாடு, தெய்வசெயல்புரம், நெல்லை டவுன் பகுதிகளை சேர்ந்த மேலும் 13 பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை சிலர் பறித்து சென்றுவிட்டதாக புகார் கொடுத்தனர். மேலும் பல பெண்களிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மொத்தம் 13 பெண்களிடம் 100 பவுன் நகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் ஆகும். இதையடுத்து காவல்துறையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண் டனர்.

விசாரணையில்  3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி நகைகளை பறிகொடுத்த பெண்கள் கூறும் போது, குடமுழுக்கில் காவல்துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண் காணிப்பதாக காவல்துறையினர் கூறினர். ஆனாலும் இன்னும் பல பெண்களிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையினரின் கவனக்குறைவு, குளறுபடிகளே காரணம் என குற்றம் சாட்டினர்.

கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கி பலி

கோபி, செப்.9 கவுந்தப்பாடி அருகே, கோவில் விழாவுக்கு, தீர்த்தம் எடுக்க, பவானி ஆற்றில் குளித்த இரண்டு பக்தர்கள், தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர், கோகுல், 24; திருப்பூரில், செல்பேசி கடையில் ஊழியராக பணிபுரிந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர், பிரபு, 28; திருப்பூரில், பனியன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்தார். இருவரும், கவுந்தப்பாடியில் உள்ள அம்மன் கோவில் விழாவுக்கு தீர்த்தம் எடுக்க, அப்பகுதி மக்களுடன் பவானி ஆற்றுக்கு நேற்று சென்றனர்.

பெருந்தலையூர் அருகே, ஈஸ்வரன் கோவில் படித்துறையில், அனைவரும் காலை, 7:30 மணிக்கு குளித்தனர். கோகுல், பிரபுவை தவிர, மற்ற அனைவரும் கரை ஏறினர்.

நீச்சல் தெரியாத கோகுல், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரிந்த பிரபு, காப்பாற்ற சென்ற போது, அவரும் சிக்கி, தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடிய நிலையில், இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. பலியான இருவருக்கும் திருமணமாகவில்லை என, காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

காலாப்பட்டு, செப்.9 புதுவையொட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள புத்துப்பட்டில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான கோவிலாகும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இங்கு இரவுநேர காவலாளிகளாக கார்த்திக், குணசேகரன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் ஈடுபட்டு விட்டு அங்கேயே தூங்கினார்கள்.

இந்நிலையில் நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியலை உடைத்தது. சத்தம் கேட்டு காவ லாளிகளான கார்த்திக், குண சேகரன் ஆகிய இருவரும் அங்கு வந்து பார்த்தனர்.

அப்போது யாரோ சிலர் உண்டியலை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காவலாளிகளை ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த காவலாளிகள் மயங்கி விழுந்தனர். இதன்பின் அந்த ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், தங்கம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை அந்த பகுதி மக்கள் கோவிலுக்கு சென்றபோது காவலாளிகள் காயத் துடன் மயங்கி கிடந்ததையும், உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர்  மைக்கேல் இருதயராஜ் மற்றும் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து விசாரித்தனர். விழுப் புரம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகு மாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

விழுப்புரத்தில் இருந்து காவல்துறை மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டனர். மோப்ப நாய், கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கோவிலில் புகுந்து கொள்ளையடித்த நபர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner