எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நான்டெட், செப்.10 மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, சமூகத்தை பிரிப்பதில் பாஜவும், மோடியும் தீவிரமாக உள்ளனர் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம்  நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த பணத்தாள் திரும்பப் பெறும் நடவடிக்கை முழுக்க முழுக்க தோல்வி திட்டமாகி உள்ளது. இத்திட்டத்தால், திருட்டுத்தனமான கருப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதை அனைவருமே அறி வார்கள். முதலில் இந்த நடவடிக்கையை தீவிரவாதத்துக்கு எதிரானது என்றார்கள். பின்னர், கருப்பு பணத்துக்கு எதி ரானது என்றார்கள். ஆனால், ரியல் எஸ்டேட், தங்கத்தில் தான் 90 சதவீத கருப்பு பணமும் இருக்கும் உண்மை இந்த நாடே அறிந்தது. பணத்தாள் திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு பிறகு 99 சதவீத பழைய நோட்டுகளும் கருவூலத்திற்கு வந்து விட்டதாக ரிசர்வ் வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிந்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது? பிரதமர் பொறுப்பேற்றாரா? பாஜவும், மோடியும் சேர்ந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறார்கள். அரியானாவில் ஜாட் சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கு சண்டை மூட்டி விடுகின்றனர். மகாராஷ்டிராவில் மராத்தாவினருக்கும் பிற சமூகத்தினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்து கினறனர். மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜவும், மோடியும் சமூகத்தை பிரிப்பதில் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.ஊழலை எதிர்த்து போராடுவதாக கூறிக் கொள்ளும் அவர்கள், கோவாவிலும், மணிப்பூரிலும் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். குஜராத்தில் கூட எம்எல்ஏக்களை வாங்க முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒன்றிரண்டு தேர்தலில் போட்டியிடலாம். அதன்பின் மீண்டும் காங்கிரஸ் தான் அதிகாரத்தை எட்டிப்பிடிக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner