எழுத்துரு அளவு Larger Font Smaller Font

“துக்ளக்” அட்டைப்படம் -13.9.2017

‘நீட்’ என்னும் சமூக அநீதி - பார்ப்பனிய கொடுவாளுக்குப் பலியான அனிதாவின் மரணத்திற்குப் பிறகும் கூட பார்ப்பனர்களின் மனம் இரங்கவில்லை.

காகத்தையும் படைத்து கல்மனப் பார்ப்பானையும் ஏன் படைத்தாய்? என்ற பாடல் வரிதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது!

தற்கொலைக்கு விரட்டப்பட்ட அனிதா தமிழ்நாட்டின் தலைவர்களை எல்லாம் சந்தித்து ரத்தக் கையெழுத்திட்டு, தன் மனக் குமுறலை வெளிப்படுத்தினாரே - அது என்ன கட்சித்தலைவர்களின் தூண்டுதலால்தான் நடைபெற்றதா?

சமூக நீதிக் கொள்கையில் சவுண்டிகளின் ஈனப்புத்தி எத்தகையது என்பது இந்தக் கார்ட்டூன் மூலம் தெரியவில்லையா?

யாசகம் புருஷ லட்சணம் என்னும் பார்ப்பனர்களா பிச்சை எடுப்பது பற்றிப் பேசுவது?

எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கலைஞர் வீட்டுக்கும், திராவிடர் கழகத் தலைவர் அலுவலகத்துக்கும் வந்து பிச்சை எடுத்த பார்ப்பனரை அறியுமா ‘துக்ளக்’?

35 மார்க்கு எடுத்த தலித்துகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுப்பதாக இந்த 2017லும் ஒரு கோமாளிப் பார்ப்பானால் எழுதமுடிகிறது என்றால் இது அறியாமையல்ல - எதையும் எழுதலாம் என்ற பார்ப்பனக் கொழுப்பு தானே, அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஆணவம்தானே,  துள்ளிய மாடு பொதி சுமக்கும் எச்சரிக்கை!

பிராமணர்கள் வேதம் ஓத வேண்டியதுதானே, உங்களுக்கு எதுக்குப் பிணம் அறுக்கும் டாக்டர் வேலைஎன்று காந்தியாரே சொல்லியிருக்கிறாரே - காந்தியாரை மகாத்மாவாக்கிய பார்ப்பனர்கள் சிந்திக்கட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner