எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று கூறி, காவிரி மகாபுஷ்கரம் என்ற பெயரில் பார்ப்பன - பக்தி - வியாபாரம் செய்து கொழிக்கத் திட்ட மிட்டுள்ள பூணூல் சுரண்டல் கூட்டமே!

இவ்வளவு சக்தி உங்கள் மகாபுஷ்கரத்திற்கு இருந்தால், காவிரி கரை புரண்டு ஓடிடவேண்டாமா? குளிப்பதற்குக்கூட காவிரி நீர் இல்லை - தொட்டி கட்டி நீராடும் வித்தை செய்யும் வீணர்களே, காவிரி நீரையாவது வெள்ளமெனப் பெருக்கெடுத்தோட, உங்கள்யாகம், யக்ஞம் - மந்திரம், ஆத்மார்த்த சக்திமூலம் செய்து காட்டி, கொண்டாட அழைத்தால் பொருள் உண்டு.

அதைச் செய்துவிட்டு பிறகு புஷ்கரம் - பூஜை, புனஸ்காரம் என்றெல்லாம் கொண்டாடுங்கள்!

மூட பக்தியே உன் கதி இப்படியா?

பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்

புஷ்கரம்மூலம் கருநாடக அரசின், மன மாற்றத்தை செய்து காட்டுவீர்களா?

- ‘‘காவிரி நாடன்''

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner