எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிபிஎஸ்இ 5ஆம் வகுப்பு இந்தி மொழி இலக்கண பாடத்தில் ஆண் பால், பெண்பால் குறித்த விளக்க எடுத்துக்காட்டுகளில் சமாரன் செருப்பு தைப்பவர் (ஆண் பால்) சமாரினி செருப்பு தைப்பவள் (பெண் பால்) அதே போல் பாபி, பாவம் செய்தவன் (ஆண் பால்) பாபின் பாவம் செய்தவள் (பெண்பால்) என்று எழுதி குழந்தைகளின் மனதில் ஜாதிய நச்சு விதைக்கப்படுகிறது  வட இந்தியாவில் உயர் ஜாதியி னரைக் குறிப்பிடும் சொற் களும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

பண்டித்(பண்டிதர்)  பண்டிதாயின்(பண்டிதப் பெண்)

பாபு(பெரியவர்) ஆண் பால்,  பாபுஆயின் மதிப்பிற் குரிய பெண் பெண்பால்

சவுதிரி,(ஆண்பால்) சவுதிராயின்(பெண்பால்) சி.பி.எஸ்.இ என்றால் ஏதோ நெய்யில் பொரிக்கப்பட்ட தாக தம்பட்டம் அடிப்ப வர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஒரு கால கட்டம் இருந் தது. இவன் அம்பட்டன் சிரைக்கிறான், இவன் வண் ணான் துணி துவைக்கிறான், இவன் தச்சன் மரம் அறுக் கிறான், இவர் அய்யர் பாடம் படிக்கிறார் என்றிருந்த ஒரு கால கட்டம் பெரியார் சகாப்தத்தின் முகரை உடைந்து முகவரி தெரி யாமல் வெருண்டு ஓடியது.

இந்து ராஜ்ஜியத்தை ராமன் ராஜ்ஜியத்தைக் கொண்டு வர "வாள்களைத்" தீட்டிக் கொண்டு இருக்கும்  அவாள்கள், இப்பொழுது அதன் தொடக்கமாக இப்படிப் பாடங்களைப் பாட பேதம் செய்து, ஜாதி நச்சு விதையைப் பிள்ளைகளின் நெஞ்சில் பதியம் போடும் வேலையில் இறங்கியுள் ளனர்.

1952இல் முதல் அமைச்ச ராக இருந்த இராஜகோ பாலாச்சாரியார் என்ன செய்தார்? 6000 பள்ளி களை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலான குலத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற குலக் கல்வித் திட்டத்தைத் திணிக்கவில் லையா?

பிஜேபி ஏதோ பத்தோடு பதினோராவது அரசியல் கட்சி என்று அலட்சியமாகக் கருதினால் பார்ப்பனர் அல் லாத மக்களின் வளர்ச்சிக் கரு கருகிவிடும் எச்சரிக்கை!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner