எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப். 14 -பத்திரி கையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொல்வதற்கு முன்பு கொலையாளி மூன்று முறை வேவு பார்த்துள்ளது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மத வெறி அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்கி வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பெங்களூரு நகரில் உள்ள அவரது வீட்டு வாசலிலேயே கடந்த செப்டம்பர் 5- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக, சிறப்புப் புலனாய்வு பிரிவை அமைத்து கருநாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, கவுரி லங் கேஷை சுட்டுக் கொன்ற  நபர், அன்றைய தினம் 3 முறை லங்கேஷின் வீட்டை வேவு பார்த்தது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் உறுதியாகியுள்ளது.

கவுரி லங்கேஷ் வசித்த தெருவை இருசக்கர வாகனத்தில் 2 முறை வேவு பார்த்த பின் னர், 3- ஆவது முறையாக வந்த போதே, லங்கேஷை கொலையாளி சுட்டுக் கொன் றதும் தெரியவந்துள்ளது. முதல் 2 முறையும் கையில் ஆயுதம் இல்லாமல் வந்த கொலையாளி, இரவு நேரத்தில் 3- ஆவது முறையாக வரும்போது, தோளில் ஒரு பையுடன் வந்ததும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

மேலும், பெங்களூருவைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.எம். கல்புர்கியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் இதே வகையைச் சேர்ந்தது என்பதைத் தடயவியல்நிபுணர்கள்உறு திப்படுத்தியுள்ளனர். அவரது உடலைத் துளைத்த தோட்டாக்களை ஆய்வு செய் ததில், அவை 7.65 எம்.எம். வகை நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படுவது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner