எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகெங்கும் தந்தை பெரியார் பிறந்த நாள்விழா

சென்னை, செப்.16 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 139 ஆம் ஆண்டு பிறந்த நாளை (17.9.2017) உல கெங்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண் டாடப்படுகிறது.

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் தலைவர் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.9.2017 அன்று தேசியத் திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

ஆஸ்திரேலியா

பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில், 17.9.2017 பகல் 1 மணிமுதல் 4 மணிவரை ஆஸ்திரேலியாவில் (மவுண்ட் ஆமனே நூலகம், மவுண்ட் ஆமனே வணிக மய்யம், 171, டேன்டினாங் சாலை, மவுண்ட் ஆம்னே, குயின்ஸ்லாந்து 4074) பகுத்தறிவுப் பகலவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா

தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அமெரிக்காவில் கலி போர்னியா மாநிலத்தில் வளைகுடா பகுதியில் உள்ள சேன் ஓஸ் மாநில பல் கலைக்கழகத்தின்  மார்ட்டின் லூதர் கிங் நூலக அரங்கத்தில் செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை நடைபெற உள்ளது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் மனித நேயம் எனும் தலைப்பில், சேக்ரமாண்டோ பல் கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அம்ரிக் சிங், இந்திய சிறுபான்மையினர் கழகத்தின் பீட்டர் பிரட்ரிச், பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பின் இயக்குநர் பிந்தர் சிங், அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் ச.கார்த்திகேயன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோ.கருணாநிதி ஆகியோர் உரை யாற்றுகின்றனர்.

பெரியார் பன்னாட்டமைப்பின் கலிபோர்னியா கிளை, பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய சிறுபான் மையினர் கழகம், அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை நடத்துகின்றன.

சிங்கப்பூர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பட்டிமன்றம் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றத்தை பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயரவில்லை! என்ற தலைப்பில்

8 மாணவர்கள் உரையாற்ற உள்ளார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் கல்வி அமைச்சு தமிழ்த்துறை உதவி இயக்குநர் த.வேணுகோபால் அவர்கள் கலந்துகொள்கிறார். 17.9.2017 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை  சையத் ஆல்வி சாலையில் உள்ள ஆனந்தபவன் உணவகத்தின் இரண்டாவது தளத்தில் நடைபெறவுள்ளது.

புதுடில்லி

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2017 அன்று டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலுள்ள நூற்றாண்டு விழா அரங்கத்தில் (எஸ்.எஸ்.ஏ. அரங்கம்) நன்பகல் 2.30 மணிக்கு, தந்தை பெரியார் பார்வையில் தேசியமும், தேசியவாதமும் என்ற தலைப்பில் எழுத்தாளர் பேராசிரியர் அலோய்சிஸ் அவர்கள் உரையாற்றுகிறார். இந்நிகழ்வை தமிழர்கள் உரிமைக் குரல் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

விசாகப்பட்டினம்

நாடு முழுவதும் தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் மற்றும் மூடநம்பிக்கைக்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள், நாத்திக கருத்துக்களைப் பரப்புபவர்கள் கொலைசெய்யப்பட்டு வருகின்றனர். அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர், கருத்தை ஏற்கவிரும்பாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.   கொலை செய்யபப்ட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காதவாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் மக்களிடையே தங்கள் பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ‘ரன் ஃபர் பெரியார்’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் உள்ள காளிதேவி கோவில் அருகிலிருந்து விழிப்புணர்வு பிரச்சார ஓட்டம் துவங்கப்பட உள்ளது.

அதிகாலை 6 மணிக்கு துவங்கும் இந்த பிரச்சார ஓட்டத்தின் இறுதியில் 9 மணி அளவில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது, அதன் பிறகு விசாகபட்டினத்தில் உள்ள அம்பேத்கர் பவனில் நாத்திகம் பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வகுப்புகள் நடைபெற உள்ளது. 11 மணிக்கு துவங்கும் இந்த பிரச்சார வகுப்பை எபிஎம்கே வரபிரசாத் நடத்துகிறார். 2 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 முதல் 6 மணிவரை தற்போதுள்ள சூழலில் சமூகத்தில் உள்ள பிரச்சனைகள் எதிர்கொள்ளும் விதங்கள் குறித்து கருத்தரங்கம் ஒன்றை பெரியார் ஆசிய சாதனா சங்கம் நடத்த உள்ளது.  இதில்  சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர்.ஜெயகோபால், டாக்டர்.பி சுப்பாராவ்,பல்டிபெந்தாராவ், நரேஷ்.எஸ்எஸ்ஃப், சிறீ.ராமமூர்த்தி ஆனந்த மற்றும் பல சான்றோர்கள் கலந்துகொள்கின்றனர்.

சென்னை

 

 

 


பெங்களூரிலுள்ள பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர்

அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பெங்களூரு, செப்.16  பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் வெள்ளிக்கிழமை தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசியதாவது:

திராவிட கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும், சமூக நீதிக்காகவும் தந்தை பெரியார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவர் நடத்திய போராட்டங்களின் விளைவாக தற்போது பல்வேறு பலன்களை நாம் அனுபவித்து வருகிறோம். அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் போராட்டங்களால் நாட்டின் பெரும் புரட்சியே ஏற்பட்டது. அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும். பெங்களூரில் ஒரு பேருந்து நிலையத்துக்குப் பெரியாரின் பெயர் சூட்டப்படும். மூட நம்பிக்கையைத் தடுக்கும் வகையில் கருநாடக அரசு சட்ட மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது. மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி, புத்தர், பெரியார், அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி வாழவேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மூத்த சிந்தையாளர் கே.எஸ்.பகவான், தலித் சங்கர்ஷ சமீதியின் தலைவர் எச்.மாரப்பா, காங்கிரஸ் பிரமுகர் உதயசங்கர், தம்மையா, எச்.விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner