எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஆளும் கட்சி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த தமிழக சட்டசபை சபாநாயகரின் முடிவு - அரசியல் சட்ட விரோத நடவடிக்கையாகும்.

இப்போது அவர்கள் 18 பேர் - கட்சி மாறிடவில்லை; மாறாக அணி தாவல்கள் தான் அங்கே நடைபெறுகின்றன. சட்டமன்றத்திற்கு வெளியே நடந்ததைக் காட்டி நடவடிக்கை என்றால், 19 பேரில் ஒருவருக்கு மட்டும் சலுகை எதைக் காட்டுகிறது?

அவர்களது முடிவு கெட்ட நோக்கம் (விணீறீணீ திவீபீமீ) கொண்டது என்பதையேக் காட்டுகிறது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டதல்ல 10ஆவது அட்டவணைத் திருத்தம். எனவே நீதிமன்றங்கள் தலையிடும் வாய்ப்பு இதில் அதிகம் உண்டு.

கொறடா உத்திரவோ, சபைக்குள் நடவடிக்கையோ, வேறு கட்சிக்குத் தாவியதோ எதுவும் இல்லாத போது இதனை அரசியல் சட்டப்படி, நியாயப்படுத்த முடியாது.

அரசியல் சட்ட, ஜனநாயகத்திற்கு விரோதம் இது!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner