எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மேனகா காந்தி

‘இறைச்சி கொல்லுகிறது’ என்ற தலைப்பில் மயாங்க் ஜெயின்என்பவர்தயாரித் துள்ளகுறும்படம் டில்லியில் திங்களன்று (18.9.2017) திரை யிடப்பட்டது. அவ்விழாவில் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

‘‘கடந்த 30 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ‘இறைச்சி சாப் பிடுவதுஉடல்நலனுக்குத்தீங் கானது’ என்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. மனித உடல் சைவ உணவை மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இந்த இயற்கை விதியை மீறி நாம் இறைச்சி சாப்பிட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். நாள்தோறும் இறைச்சி சாப்பிட்டால் உடல் பலகீனமாகி விடும். இறைச்சி சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடியாக மரணம் நேரிடாது. ஆனால், அது உங்கள் உடலை மிகவும் பலவீனப்படுத்தி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், முதலில் நீங்கள்இறைச்சியைசாப்பிடு கிறீர்கள். பிறகு இறைச்சி உங்களை சாப்பிடத் தொடங்கி விடும்‘’ என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் கூறுவது பொத்தாம்பொதுவாகஇருக் கிறதே தவிர, எந்த மருத் துவஆய்வுகூறியதுஇறைச்சி சாப்பிடுவது கூடாது - உடல் நலனுக்குக் கேடு என்பதை விளக்கி இருக்கவேண்டும். மத்திய அமைச்சர் நினைத்திருந் தால் அந்த விவரங்களை ஒரு நொடிப் பொழுதில் பெற்றுவிட முடியும்.

95 வயதுவரை வாழ்ந்த தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட் டவர்தான்.

பார்வதியின் ‘ஞானப்பால்' உண்டதாகக் கூறப்படும் சைவ சமயக் குரவர்களில் ஒருவராகக் கூறப்படும் திருஞானசம்பந்தர் என்ற பார்ப்பனர் முழு சைவக் குழந்தைதான். 16 வயதில் அற்பாயுளில் மரணம் அடைந்தாரே - என்ன பதில்?

சைவஉணவைச்சாப்பிட்ட வர்கள்நீண்டநாள்வாழ்ந் தார்கள்; இறைச்சி சாப்பிட்ட வர்கள் குறைந்த காலம்தான் வாழ்ந்தார்கள் என்பதற்கான புள்ளி விவரத்தைக் கூறட்டுமே பார்க்கலாம்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் காந்தியார், ‘‘பசு வின் பாலைக் குடிக்காதீர்கள். அது மாட்டுக்கறியின் சாறு’’ என்றார்.

உடனே டாக்டர் இராதா கிருஷ்ணன், ‘‘அப்படியானால், நாம் எல்லோரும் மனித மாமிசம் உண்டவர்கள்தான்’’ என்றார்.

எப்படி என்று காந்தியார் கேட்டபோது,

‘‘நாம் அனைவரும் தாயின் பால் குடித்துத்தானே வளருகிறோம் - அதை மனித மாமிசத்தின் சாறு என்று கூற லாம் அல்லவா?’’ என்றாரே, பார்க்கலாம்.
காந்தியார் ‘கப்-சிப்!’

மேனகா காந்திக்கும் அதே பதில்தான்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner