எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழ்நாட்டில் ஸ்ட்ரோக் 2 ஆம் நிலை நீரிழிவு நோய், புற்றுநோய், இருதய நோய்களின் தாக்குதல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் 72.3 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் இத்தகு நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். ஜங்புட் உணவுகள், மதுப் பழக்கம் போன்றவைகளும் இதற்குக் காரணங்களாகும்.

18 ஆம் தேதி வெளிவந்த ‘‘டெக்கான் கிரானிகிள்’’ நாளேடு இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.

‘ரத்து செய்!’

ஜி.எஸ்.டி.யை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழி யர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வீழ்ச்சி

இந்தியப் பொருளாதாரத்தில் முதல் காலாண்டில் ஆலை உற்பத்தி வளர்ச்சி வீதம் வெறும் 1.2 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது.

பாதிப்பு

சர்தார் சரோவர் அணைக் கட்டுத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள்: பாதிக்கப்படும் மாநிலங்கள் -3, பாதிக்கப்படும் கிராமங்கள் - 244, நீர் வசதியின் மையால் பாதிப்புக்கு ஆளாகும் கிராமங்கள் - 210, பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்கள் - 10,000, மாற்று இடம் வழங்கப்படாத குடும் பங்கள் - 40,000, நீரில் மூழ்கும் நிலங்கள் - 91,000 ஏக்கர், 1967 முதல் இந்நாள் வரை இடம் பெயர்ப்புக்கு ஆளானோர் - 44 லட்சம்.

மறுப்புகள்

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் ஏராளமான பொய்த் தகவல்கள். ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் உ.பி.யில் எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை.
- அகிலேஷ் யாதவ், உ.பி. முன்னாள் முதலமைச்சர்

உ.பி. முதலமைச்சர் ஆதித்ய நாத் வெள்ளை அறிக்கை வெளி யிட்டிருப்பது தரம் தாழ்ந்த யுக்தியாகும்.
- மாயாவதி, உ.பி. முன்னாள் முதலமைச்சர்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner