எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மெல்போர்ன், செப்.21 பிரதமர் மோடியின் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன என ‘தி ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது.

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அகமதாபாத்தில் கடந்த 14 ஆம் தேதி  நடைபெற்றது. புல்லட் ரயில் திட்டப்பணிக்கு  அடிக்கல் நாட்டிய பிரதமர்  மோடி இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என புகழ்ந்தார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசும் போது இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றினால் முடியாதது என எதுவும் இல்லை  என கூறி இருந்தார்.

இந்த நிலையில் ‘தி ஜப்பான் டைம்சில்'   ஒருகட்டுரைவெளியிடப்பட்டுள்ளது.அதில் மோடியின் செயல்பாடுகள் தோல்வி  அடைந்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கட்டுரையை ரமேஷ் தாகூர் என்பவர் எழுதியுள்ளார்.

அதில் உலக அரங்கில் வர்த்தகத்தில் இந்தி யாவை முதலிடத்தில் கொண்டு வருவதாக கூறிய மோடி, 130-190 ஆவது ரேங்கில் தான் இருக்கிறது என உலக வங்கி அறிக்கையளித்து உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய துறையான கட்டுமான துறையில் முந்தைய அரசைவிட கடும் சரிவை சந்தித்துள்ளது.  சர்ஜிக்கல் அட்டாக், ரூபாய் நோட்டு தடை, பொய்யான வாக்குறுதிகள், போலியான திட்டங்கள், அறிக்கைகள், மாட்டிறைச்சி தடை, மதக்கலவரம், பாதுகாப்பின்மை, அச்சுறுத்தல், என பலவற்றை சுட்டிக்காட்டி எழுதப்பட்டு உள்ளது.

ரமேஷ் தாகூர், ஆஸ்திரேலிய தேசிய பல் கலைக் கழகமான கிராபோர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் பாலிசியின் பேராசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner