எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவான் அதிர்ச்சித் தகவல்


திருவனந்தபுரம், செப். 22 -மத வெறியர்களின் படுகொலை பட்டிய லில், கவுரி லங்கேஷூக்கு அடுத்த இடத்தில் தன்னைத்தான் வைத்திருக்கி றார்கள் என்றும், ஆனால், மரணத்தை பற்றி எனக்கு எந்த பயமும்கிடையாது என்றும் புகழ் பெற்ற கன்னட எழுத் தாளரும் சிந்தனையாள ருமான கே.எஸ்.பகவான் கூறியுள்ளார்.

கருநாடகத்தில் மூத்த பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ், சங்-பரிவார கும்பலால் சுட்டுக் கொல் லப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், இந் துத்துவத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் கே.எஸ். பகவானும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.

கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான கே.எஸ்.பகவானுக்கு கன்னட சாகித்ய அகாட மியானது, 2013-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனை யாளர் விருது அளிக்க முடிவு செய்தது. அப் போதே கன்னட சாகித்ய அகாடமி அலுவலகத் துக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், பகவானுக்கு விருது கொடுக்கக் கூடாது;அவர் இந்துக்களுக்கு எதிராக எழுதுபவர் என்று மிரட்டல்கள் விடப்பட்டன. இதுபற்றி அப் போதே பெங்களூரு காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இப்போதும் இந்துத்துவா சக்திகளின் அச்சுறுத்தலிலேயே தான் வாழ்ந்து வருவதாக கே.எஸ். பகவான் கூறியுள்ளார்.கேரள மாநிலம் காலடியிலுள்ள தனியார் பல்கலைக் கழகத்தில், புதனன்று நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் கே.எஸ். பகவான் கலந்து கொண்டார். பின்னர் பெங்களூருவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அப் போது, அமைதியை விரும்பும் சுதந்திரச் சிந்த னையாளர்களுக்கும், நல்லிணக்கத்தை வற்புறுத் துபவர்களுக்கும் அச் சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்பதாகவும், ஆனால் மரணத் தைப் பற்றியெல்லாம் தனக்கு எப்போதும் பயம் கிடையாது என்றும் பகவான் தெரிவித்தார்.

நான் இடதுசாரியும் கிடையாது, வலது சாரியும் கிடையாது; நான் மனித நேயவாதி; அனைவரும் இங்கே மதிப்போடும் அமைதி யோடும் வாழ வேண்டும் என்பதே என் எண் ணம்; குறுகிய சிந்தனை உடையவர்கள் என் னைக் கொல்லலாம்; ஆனால் என் சிந்தனை களைக் கொல்ல முடியாது! என்று குறிப்பிட்ட பகவான், விவேகானந்தர் அனைத்து தரப்பினரின் புத்தகங்களையும் படித்தார்; ஆனால் இப்போதோ சிலர் எந்தப் புத்தகங்களையும் படிக்காமல் கருத்துச் சுதந்திரம் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

எந்த மதம் கூறுவதையும் அப்படியே நம் பாதீர்கள்; நீங்கள் கேள்வி கேளுங்கள், உங்கள் கேள்விகளின் மூலம் விடை தேடுங்கள் என்றே தான் சொல்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner