எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மிச்சிகன், செப்.22 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் -அமெரிக்கா சார்பாக அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஆபர்ன் ஹில்ஸ் நகரில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், மாண வர்கள், பெற்றோர்கள், பெரியாரியக் கருத்தியலில் ஆர்வமுடைய பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், பள்ளி மாணவ மாணவியர் 20 பேர் பங்குபெற்று, ‘யார் பெரியார்?’ ‘நான் பெரியார் பேசுகிறேன்!’ ‘பெரியாரின் சமூகப் புரட்சி’, ‘பெரியாரின் பெண்ணியம்’ ஆகிய தலைப்புகளில் பேசினர். பெரியாரின் முற்போக்கு கருத்துகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்களால் இந்தப் போட்டி நடத்தப்பட்டது

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் பெரி யாரின் கருத்துகளை ஆழ்ந்து படிக்க ஓரு வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்ததாகவும், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரியார் கருத்துகளின் தேவை இப்போது இருப்பதாகவும், இதுபோன்ற மேலும் பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்களை வலியுறுத்தினர்.

பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங் கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது

விழாவின் போது,

1) நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும்.

2) நவோதயா பள்ளிகளைத் திறக்கும் முயற்சியும், மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயல்களும் கைவிடப்படவேண்டும்.

3) கருத்துரிமை பாதுகாக்கப்படவேண்டும்.

4) விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner