எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சாம்ராஜ்நகர் செப். 23 காவிக் கொடியை எரித்து மதக்கல வரத்தை மூட்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜக தலைவர் அமித்ஷாவின் திட் டத்தை செயல்படுத்த முயன்ற இந்து அமைப்பினர் கருநாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள நாயக்கர் வீதியிலுள்ள பிரபல விநாயகர் கோயிலில் புதிதாக பெரிய அளவிலான காவிக் கொடியை சமீபத்தில் அங்குள்ள இந்து அமைப்புகள் ஏற்றினர். இந்த நிலையில் அந்தக் கொடியை கடந்த புதனன்று சிலர் தீவைத்து எரித்தனர். இந்தச் சம்பவம் அக்கோவிலில் எதிரே இருந்த கண்காணிப்பு காமிராவில் தெளிவாக பதிவானது. இதன டிப்படையில் கொடிக்குத் தீ வைத்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், மஞ்சு மற்றும் பங்காரா ஆகியோர் என தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள இசுலாமியர்கள் கொடியை எரித்துவிட்டதாக கூறி மதக் கல வரத்தை உருவாக்குவது இவர் கள் நோக்கம் ஆகும். கண் காணிப்பு காமிராவின் மூலம் பஜ்ரங் தள் மற்றும் ராம்சேனா அமைப்பினரே கொடியை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சாம்ராஜ் நகர் காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர். இந்நிலை யில், கைதானவர்கள் அப்பாவி கள் என்றும், ஆளும் காங்கிரசு அரசு இந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்கிறது என்றும் கூறி இந்து அமைப் பினர் காவல்நிலையத்தை முற் றுகையிட்டனர்.

கருநாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்பது உறுதி யாகிவிட்ட நிலையில், அங்கு மதக் கலவரத்தை தூண்டிவிடும்  வகையில் இந்து அமைப்பினர் அமித்ஷாவின் உத்தரவிற்கு இணங்க செயல்பட்டு வருவ தாக தெரிகிறது, கடந்த மாதம் பெங்களூரு வந்த  அமித்ஷாவை கருநாடகாவின்அனைத்து இந்து அமைப்பின் முக்கிய தலை வர்கள் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்படுகிறார். இந்த நிலையில், மதக் கல வரங்களுக்காக கொடிகளையும் எரிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இசுலாமி யர்களின் மத நூலான குரானின் பக்கங்களில் வங்கி சலான் அச்சடித்து விநியோகம் செய்த இந்து அமைப்பின் செயலாளர் ஒருவர் கைதானார், அதே போல் உடுப்பியில் பாகிஸ்தான் கொடியை இந்து அமைப்பினர் ஏற்றி அதை அப்பகுதியில் வாழும் இசுலாமிய இளைஞர் கள் செய்ததாகப் பொய் புகார் கொடுத்து விசாரணையில் ராம் சேனாவினரே அந்த பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தெரியவந் ததும் குறிப்பிடத்தக்கது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner