எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஈரோடு, செப்.23 ஈரோடு அருகே உள்ள நசியனூர் பைபாஸ் ரோட்டில் அப்பாத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முரு கர், சிவன், பார்வதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகிய விக்கிரங்களும் உள்ளன.
இந்தகோவில்தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் குலதெய்வ கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல் நேற்று இரவு பூசாரிகள் கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ சிலர் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு கோவில் உள்ளே இருந்த கோவில் அலு வலக கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அலுவலகத்தின் அறை யில் உள்ள பீரோவை கொள் ளையர்கள் உடைத்தனர். உள்ளே ரூ.1 லட்சம் கோவில் பணம் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் இருந்தன. இவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

பிறகு கோவில் கரு வறை கதவு பூட்டையும் உடைத்துள்ளனர். பூட்டு உடைக் கப்பட்டு கிடந்தது. ஆனால் உள்ளே கொள்ளையர்கள் செல்லவில்லை. பிறகு கொள் ளையடித்த பணம் மற்றும் வெள்ளி பொருள்களுடன் தப்பி சென்று விட்டனர்.

நேற்று காலை வழக்கம் போல் கோவில் நடையை திறக்க வந்த பூசாரி சத்தி என்பவர் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது பற்றி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கோவை மேற்கு மண்டல அய்.ஜி.பாரியும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை பெண் நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கை ரேகைகளைப் பதிவு செய்தார்.

பொதுமக்கள் எப்போதும் நடமாடும், மேலும் அடிக்கடி வாகனங்கள்செல்லும்பகு தியில் உள்ள இந்த கோவிலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் அந்த பகுதி மக்களி டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*************************

இந்நாள்...இந்நாள்...

1952 - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிவு செய்யப்பட்டது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner