எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லியைத் தொடர்ந்து அய்தராபாத் பல்கலை. மாணவர் பேரவைத் தேர்தலில்

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு மரண அடி!

அய்தராபாத், செப். 24 -டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு ஏற்பட்ட மரண அடியைத் தொடர்ந்து அய்தராபாத் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலிலும் கல்வியை காவிமயமாக்கி வரும் பா.ஜ.க. மாணவரணி ஏபிவிபி படு தோல்வி அடைந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலோடு செயல்படும் பா.ஜ.க. அரசு கல்வி நிறுவனங்களின் மீதும், தலித் -சிறுபான்மையினர் மீதும் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அய்தராபாத் பல்கலைக் கழகமும் இதற்குமுன் கண்டிராத வகையில் ரோஹித் வெமுலா உள்ளிட்ட அய்ந்து தலித் ஆராய்ச்சி மாணவர்கள் மீது கொடூரத்தாக்குதலை தொடுத்தது. தன்னிச்சையாக மாணவர் பேரவைச் சட்டங்களைமாற்றுவது, போராடும் மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு தாக்கீது அளிப்பது உள்ளிட்ட பழிவாங் கலில் ஈடுபட்டது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதலை பல்கலைக்கழக நிர்வாகம் தொடுத்தது.இத்தகைய சூழலில் மாண வர் பேரவைத் தேர்தல் செப்.21 ஆம் தேதியன்று நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போராட்டத்தில் வகுப்புவாத மதவாத அமைப்புகளை வீழ்த்தி மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தை பாதுகாக்க சமூக நீதிக்கான கூட்டணி (அலையன்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ்- ஏஎஸ்ஜே) அமைக்கப்பட்டது. இதில் இந்திய மாணவர் சங்கம், பழங்குடி மாணவர் முன்னணி, முசுலிம் மாணவர் அமைப்பு, தலித் மாணவர் அமைப்பு, அம்பேத்கர் மாணவர் பேரவை ஆகியவை அணி அமைத்துப் போட்டியிட்டன. ஏபிவிபி-யும், ஓபிசிஎப் அமைப்பும் அணி அமைத்துப் போட்டியிட்டன.இத்தேர்தலின் முடிவுகள் செப்.22 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் சமூக நீதிக்கான கூட்டணி கைப்பற்றியது. பேரவைத் தலைவருக்கு போட்டியிட்ட அம்பேத்கர் மாணவர் பேரவையின் சிறீராக், ஏபிவிபி வேட்பாளரைவிட 170 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

துணைத் தலைவராக பழங்குடி மாணவர் முன்னணி-யின் லுனாவத் நரேஷ் 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாள ருக்கு போட்டியிட்ட ஆரிஃப் அஹமத் 409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இணைச் செயலாளர் பொறுப் புக்கு போட்டியிட்ட முசுலிம் மாணவர் அமைப்பின் (எம்எஸ்ஃப்) முஹம்மத் ஆஷிக் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கலாச்சாரச் செயலாள ராக தலித் மாணவர் அமைப்பின் குண்டெட்டி அபிஷேக், விளையாட்டுச் செயலாளராக தலித் மாணவர் அமைப்பின் லொலம் ஸ்ரவன குமார் ஆகியோரும் ஏபிவிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுக்குழுவின் 3 உறுப் பினர்களுக்கான தேர்தலில் அம்பேத்கர் மாணவர் பேரவையின் மஞ்சுளா (ஆராய்ச்சி) போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார். மற்ற இரண்டுஇடங்களை இந்திய மாணவர் சங்கத்தின் தினாஞ்ஜலி டாம், சாரு நிவேதா ஆகியோர் கைப்பற்றினர். மொத்தமுள்ள 42 கவுன் சிலர் பதவியிடங்களில் சமூக நீதிக்கான கூட்டணி30 இடங்களையும், ஏபிவிபி - -ஓபிசிஃப் கூட்டணி 12 கவுன்சிலர் களையும் கைப்பற்றியது.

பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்த மதவாத அமைப்பான ஏபிவிபி படுதோல்வியைத் தழுவியுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

டில்லி ஜேஎன்யு

இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் எஸ்எப்அய், ஏஅய்எஸ்ஏ, டிஎஸ்எப் ஆகிய இடதுசாரி மாணவர் அய்க்கிய அணி 4 முக்கிய பொறுப்புகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவராக இடதுசாரி அய்க்கிய அணி சார்பில் போட்டியிட்ட ஏஅய்எஸ்ஏ-வைச் சேர்ந்த கீதாகுமாரி 1506 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார். பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வேட்பாளர் 1042 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். துணைத் தலை வராக ஏஅய்எஸ்ஏ அமைப்பைச் சேர்ந்த சைமன் ஜோயா கான் 1876 வாக்கு களுடன் தேர்வு செய்யப்பட்டார். இவ ருக்கு எதிராக போட்டியிட்ட ஏபிவிபியின் துர்கேஸ்குமார் 1028 வாக்குகள் பெற்றார்.  பொதுச்செயலாளராக எஸ் எப்அய் வேட்பாளர் துக்கிராலா சிறீ கிருஷ்ணா 2082 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஏபிவிபியின் நிகுஞ்சி மக் வானாவால் 975 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இணைச் செயலாளராக டிஎஸ்எப் அமைப்பைச் சேர்ந்த சுபான்சு சிங் 1755 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஏபிவிபியின் பங்கஜ் கேசரி 920 வாக்குகள் பெற்றார். இந்த தேர் தலில் ஏஅய்எஸ்எப் வேட்பாளரும், தற் போதைய தலைவருமான அபராஜிதராஜ் 416 வாக்குகள் பெற்றார்.

மேலும் 31 மாணவர் கவுன்சில்களுக் கான இடங்களுக்கும் தேர்தல் நடந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner