எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லி, செப் 24 மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மத்திய அரசு விழாக்களை தேசிய மொழியான இந்தி மொழியில்தான் நடத்த வேண்டும் என்று கூறி இந்தியில் பேசுவது புண்ணியம் செய்வது போன்றது என்றும் பேசினார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய ஒரு கருத்தரங்கில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அந்த உரையில் அவர் கூறியதாவது:

"இந்தி நமது தேசிய மொழியாகும். ஆனால்  அரசின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் ஆங்கிலத்தில் தான் நடைபெறுகின்றன.   நடைபெறும் அனைத்து விழாக் களிலும் சுமார் 95 விழுக்காடு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.  அதை இனி தவிர்க்கவேண்டும், நாம் இந்தியிலேயே  பேசி இந்தியிலேயே விழாக்களை நடத்தவேண்டும். இந்தியில் பேசுவது புண்ணியம் செய்தது போன்றது;  இந்தி தேசிய மொழியில் விழாக்களை நடத்துவது புண்ணிய காரியம் செய் வது போன்றது. தற்போது பெரும்பாலான விழாக்கள் இந்தியில் நடப்பது தலைமைக்கு மிகவும் மகிழ்வை அளிக்கிறது.

அமைச்சரின் இந்தக் கருத்து இந்தி பேசாத மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner