எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாவம் போக்கச் சென்றவர்களின் பரிதாபம்

இந்து மத மகாபுஷ்கரத்துக்கு மூவர் சாவு

இதற்கு பொறுப்பு யார்?

கும்பகோணம், செப்.25 தஞ்சாவூர் மாவட் டம், கும்பகோணத்தில் நேற்று மாலை காவிரி ஆற்றில் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கி தாய், மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

மகா புஷ்கரம்

நிறைவு நாளில் நீராடல்

கும்பகோணம் பேட்டை வடக்கு மேலத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி(வயது 35). இவர் தமது மகள் சர்மிளா(வயது 12), மகன் விமல்ராஜ்(வயது 8) மற்றும் ஓட்டுநராக பணிபுரியும் தனது அண்ணன் தமிழரசனின் மனைவி கலைச்செல்வி(வயது 40), மகள் சவுமியா(வயது 12) ஆகியோருடன் மகா புஷ்கரம் நிறைவு நாள் என்பதால், நேற்று மாலை காவிரி ஆற்றில் உள்ள செட்டிப் படித்துறையில் புனித நீராடச் சென்றனராம்.

நீரில் மூழ்கி உயிரிழிப்பு

ஆற்றில் அய்வரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற் றின் நடுவில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் அய்வரும் மூழ்கினர். ஆழத்தை உணர்ந்துசுதாரித்துக்கொண்டகலைச் செல்வி, சர்மிளாவை மீட்டுக்கொண்டு கரை சேர்ந்தார். எனினும், நாகலட்சுமி, விமல்ராஜ், சவுமியா ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மூவரின் உடல்களையும் கரைக்குக் கொண்டு வந்தனர். காவல்துறையினர்உடல்களைஉடற் கூறுபரிசோதனைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இறந்துபோன சவுமியா கும்ப கோணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், விமல்ராஜ் அதே பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் 4ஆ-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

காவல்துறை விசாரணை

உயிர் தப்பிய கலைச்செல்வி வாய் பேச முடியாதவர். இதனால், அவர் எழுப்பிய அலறல் அக்கரையில் குளித்தவர்களுக்கு கேட்காததால் மூவரையும் காப்பாற்ற முடியாமல் போனதுஎனபொதுமக்கள்தெரி வித்தனர்.

இச்சம்பவம் குறித்து கும்ப கோணம் கிழக்கு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கும்பகோணம் காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி நாள்தோறும் ஏராளமானோர் மணல் திருடிச் செல்கின்றனர். இதனால், செட்டிப் படித்துறை அருகே ஆற்றில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆழம் தெரியாமல் இந்தப் பள்ளத்தில் குளித்தபோது மூவரும் உயிரிழக்க நேரிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner