எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விஜயரங்கம் - இவரது இயற்பெயர் - தமிழ்ஒளி என்று அறியப் பெற்ற புரட்சிக்கவிஞர்பாரதிதாசனின்கவிஞர் மாணாக்கர்கள் பட்டியலில் இடம்பெற்ற வர். இவர்தம் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ஒரு நூல் வெளியீட்டு விழாவாக சென்னை பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றலின் சார் பில் அதன் 703 ஆம் நிகழ்ச்சியாக நடைபெற்றது (25.9.2017).

வெளியிடப்பட்ட நூல்: கவிஞர் தமிழ்ஒளி வாழ்வும் படைப்பும். ஆக்கம் அவ்வை இரா.நிர்மலா. நூலினை வெளி யிட்டவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் கள்.

முதற்படியைப் பெற்றுக்கொண்டவர் மேனாள் சட்டப்பேரவை உறுப்பின ரும், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலை வருமான முனைவர் செ.கு.தமிழரசன்.

தொடக்கவுரை ஈரோடு தமிழன்பன். சிறப்புரை பேராசிரியர் முனைவர் பத் மாவதி விவேகானந்தன்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தமிழ்ஒளி - இந்து சமூக அமைப்புக்கே உரிய ஜாதி ஆணவப் பாம்பால் கடிபட்டவர். அதன் காரணமாக கரந்தைத் தமிழ்க் கல்லூரியின் தமிழ்க் கல்வியைப் பாதியிலேயே அறுபடச் செய்தது.

தொடக்கத்தில் திராவிடர் கழகத் தோழராக வீரநடை போட்டவர். ஈரோட் டில் கோடைக்கால சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சியில் தந்தை பெரியாரால் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களுள் தமிழ்ஒளியும் ஒருவர்.

பயிற்சி முடிந்து மாணவர் கி.வீரமணி அவர்களோடு பிரச்சாரக் குழுவில் தமிழ் ஒளியும் இடம்பெற்றார்.

(இந்தத் தகவலை நேற்றைய விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்தார்).

தமிழ்ஒளி எழுதிய வீராயி என்னும் காவியம் ஜாதி ஒழிப்பைக் கருவாகக் கொண்டது.

வெள்ளப் பெருக்கில் தப்பிப் பிழைத்த வீராயி என்ற சிறுமியை மாரிக்கிழவன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து மறுவாழ்வு அளிக்கிறான். அவன் மகன் வீரண்ணன் அவளைத் தன் தங்கையாகப் பாவித்து அன்பு பாராட்டுகிறான். அவள் பொருட்டு ஜமீன்தாரைக் கொன்ற குற்றத்திற்காக அவன் தூக்கிலிடப்படுகிறான்.

மாரிக்கிழவனும், வீராயும் பிழைப் பிற்காக ஆப்பிரிக்கா செல்கின்றனர். அங்கே பாம்பு கடித்து மாரிக்கிழவன் மடியவும், துயரம் தாளாமல் தன்னை மாய்த்துக் கொள்ள வீராயி முனையும்போது, அவளை மீட்கிறான் ஆனந்தன். அவர்கள் இருவரும் தமிழ் நாடு திரும்புகின்றனர்.

இங்கே வீராயி சேரிப் பெண் என்றறிந்த கவுண்டர் ஜாதி சார்ந்த ஆனந்தனின் தந்தை, அவர்களை வெளியேற்றுகிறார். ஜாதி கட்டுப்பாட்டை மீறி ஒரு குடிசை வீட்டில் தங்கள் திருமணத்தை நடத்துகின்றனர். அங்கே திரண்டு வந்த உயர்ஜாதி மக்கள் அந்தக் குடிசைக்குத் தீ வைத்து மரணத்தில் சாய்க்கிறார்கள் என்பது வீராயி காவி யம் (இன்றைக்கும் அந்த நிலை தொடரத்தானே செய்கிறது).

தமிழ்ஒளி பல காவியங்களை எழுதி அதனை அச்சிடப் பல பதிப்ப கத்தார்களிடமும் அலைந்து திரிகிறார் - ஆனால், ஏற்பாரில்லை. அதற்குக் காரணம் என்ன?

‘‘பாரதிக்குப் பிறகு பாரதிதாசன் ஏற்கப்பட்டுள்ளது உண்மை. அடுத்த நிலையில் யாரை முன்னிறுத்துவது? தங்கள் ஜாதி சார்ந்த ஒருவரே பெருங் கவிஞர் என்ற தகுதி பெறவேண்டும். அவருக்குப் போட்டியாக தமிழ்ஒளி வந்துவிடக் கூடாது என்று சில பதிப்பகத்தார்கள் விரும்பினார்கள்’’ என்று சொல்லுகிறார் - தமிழ்ஒளியின் படைப்புகளை நூல்களை புரவலராக இருந்து கொண்டு வந்து கொண்டிருக்கும் பெரியவர் செ.து.சஞ்சீவி அவர்கள் (நூல் தமிழ்ஒளி நினைவாக - சில பதிவு கள், பக்கம் 101). இந்தப் பெரியவர் இல்லாவிடின், தமிழ்ஒளியின் படைப்புகள் இருளில் மூழ்கிப் போயிருக்கும்.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner