எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமை களுக்காகவும், ஈழத்தில் நடை பெற்ற இனப் படுகொலைகள் குறித்தும், நீதி விசாரணை பற்றியும், அவருக்கே உரித்தான முறையில் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் முழங் கியுள்ளார்.

அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள் அவரைத் தாக்க முயற்சித்திருப்பது கண் டனத்துக்குரியது. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிலையிலேயே பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இப்படி சிங்கள வெறியர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால், அவர்களின் மூர்க்கத்தனம் எத்தகையது என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாமே!

அய்.நா. மனித உரிமை ஆணையமும், இந்திய மத்திய அரசும் இதன்மேல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

தாக்கப்பட்டது தனி மனிதரல்ல - மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த நிலையில்தான், தாக்க முயற்சிக்கப்பட்டுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

 

கி.வீரமணி 
தலைவர்,   திராவிடர் கழகம்

 26.9.2017

சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner