எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, செப்.26 -அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீதானதாக்குதல் முயற்சியை தி.மு. கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முகநூல் பதிவில் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும் சிங்களர்களின் இச்செயலை மத்திய அரசு உடனே கண்டிக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது முகநூல்பதிவில் கூறியிருப்பதாவது:-

அய்.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், ஈழத் தமிழர் களுக்கு எதிரான இனப்படுகொலைபற்றிப் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை, சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித உரிமை ஆணையத்திற்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங் களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலை யளிக்கிறது. இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner