எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆப்பதனை அசைத்துவிட்ட மத்திய அரசுக்குச் சமர்ப்பணம்

தமிழ்நாட்டிற்கு ‘நீட் வேண்டாம் - அய்.நா. முன்பு அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்

நியூயார்க், செப்.27  தமிழ்நாட்டின்  மேம்பாட்டில் அமெரிக்க வாழ் தமிழர்களின்  தவிர்க்கமுடியாத பங்களிப்பை அய்நா முன்   நடந்த கவன ஈர்ப்பு நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய  மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச் சியில்  தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.இதற்கு தமிழகத்தின் அனைத்து நிலை மக்களும் உயர் கல்வி படிப்புகளில் பங்கேற்று அது சமூக முன்னேற்றத்திற்கான வழிக்கு வித்திட்டுள்ளதும் மிக முக்கியக் காரணம். இதனைப் பல ஆய்வுகளும்  அரசு செய்திகளும் உறுதி செய்துள்ளன. கல்வி  நிலையங்களின் தரமும், உயர்கல்வியில் தேர்ச்சி யும், பிற  மாநிலங்களை விட பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.  கிராமப்புற பள்ளிகளில் பயின்றவர்கள் தங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கு கல்வியைப் பயன்படுத்தியுள்ளனர் என சமூக பொருளாதரக் குறியீடு காட்டுகிறது.

கிராமப்புற பின்னணியிலிருந்து  அரசு பள்ளி களில் படித்த பலரும் இன்று அமெரிக்காவின் பல முன்னணி  நிறுவனங்களில், பல்கலைக் கழ கங்களில் ஆராய்ச்சிக் கூடங்களில் நிபுணர்களாகப் பணியாற்றுகின்றனர். இந்தச் சூழலில் நீட் எனும் திடீர் நுழைவுத்தேர்வு திணித்தலின் மூலம்பலரின்உயர்கல்விக்கனவுகள்அழிந்தன. மருத்துவராகியிருக்க வேண்டிய அனிதா தற் கொலை செய்துகொண்டார். இது அமெரிக்க வாழ் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் இதற்கான  நிரந்தர தீர்வுவரும்வரை தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய தேவையையும் உணர்த்தியது. மாநிலக்கல்விப்பாடத்திட்டத்தில்படித்தஅவர் களின் அறிவே இன்று பலதுறைகளில் உல கின் முன்னோடியாக நிறுத்தியுள்ளதைஉணர்ந்த அமெரிக்கப் தமிழர்கள் நீட் எனும் நுழைவுத்தேர்வு திணிப்பால் தங்களைப் போன்ற பலரும் இனி கல்வியின் மூலம்  மேம்பாடு அடைய முடியா வண்ணம்  சதிவலை பின்னப்பட்டதாகவே பார்க் கின்றனர்.

தொடர்ந்து தங்களாலான வழிமுறைகளில் எதிர்ப்புகளைக் காட்டவும் சரியான மாற்று ஏற்பாடுகளைப் பற்றி பல கருத்தரங்கங்களும்  நடத்தினர். 35  மாநிலங்களில் தன்னெழுச்சியான போராட்டங்கள் பெரும் பங்கேற்புடன்  நடை பெற்றன. பின்னர் இந்தியத் தூதரகங்கள் முன் அமைதியான முறையில் கவன ஈர்ப்புகள்  நடைபெற்றன. அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை, உல்கத்தமிழர் அமைப்பு , பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் மற்றும் பல  நாடு தழுவிய அமைப்புகள்  விளக்கக் கூட்டங்கள்  நடத்தின.

செப்டம்பர்23அன்று அய்நாவின் 72 ஆவது கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டி நியூயார்க்கில்  அய்நாவின் தலைமையகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை  அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பாக  நடத்தினர். இதற்கு  நியூயார்க், நியூஜெர்சி, டெலவேர், பிலடெல்பியா, மேரிலாந்து, கனெக்டிகட், வெர்ஜீனியா இன்னும் பிற மா நிலங்களிலிருந்தும் திரளான தமிழர்கள் வந்து கவன் ஈர்ப்பை எழுச்சியோடு  நடத்தினர்.

அனிதாவின் சாவுக்கு  நீதி கேட்டு மேற்கண்ட அனைத்துப் போராட்டங்களிலும் நீட்டிலிருந்து தமிழகத்திற்கு  நிரந்தர விலக்கு, கல்வியை  மாநிலப் பட்டியலுக்கு  மாற்றுவது என்ற கோரிக் கைகளே வலியுறுத்தப்பட்டன.

இந்தக்கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இதிலிருந்து இந்திய அரசுக்கு தெரிவிப்பது என்னவெனில் தமிழக மக்களையும், தமிழக அரசியல்வாதிகளையும் தவிர தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த விச யங்களில் அமெரிக்கத்தமிழர்கள் தீவிர சிந்த னையுடன்,செயல்திட்டங்களுடன்தொடர்ந்து கவனிக்கப்படவேண்டிய, கருத்தில் கொள்ளவேண் டிய சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

நீட் தேர்விற்கு விலக்குக் கிடைக்கும் வரை, தமிழகக் கல்வியில் மத்திய அரசு தலையிடாமல்மாநிலஅரசின்பட்டி யலுக்குக் கல்வியை மாற்றும்வரைதொடர்ந்து அழுத்தம் கொடுக்க அமெரிக்கத் தமிழர் கள் தயாராகிவிட்டனர். அய்நா முன் புது வீச்சுடன்,‘‘அச்சமில்லைஅச்சமில்லைஅச்ச மென்பதில்லையே'' என்ற முழக்கம் அமெரிக்கத் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கான நல்ல மாற் றங்களுக்குத் துணை நிற்பார்கள் என்பதைக் காட்டியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner