எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறார்! (1)

‘‘மதச்சார் பின்மை நம் நாட்டின் அடை யாளம். பல்வேறு கலாச்சார மும், பன்முகத் தன்மையும் இருப் பதால் நம் நாட்டில் அய்.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் உள்ளிட்ட பயங் கரவாதிகள்கூட, தோல்வியைத் தழுவியுள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை வேரறுக்க மற்ற நாடுகளுடன் நம் நாடும் கைகோர்த்துப் பணியாற்றும்'' என்று சொல்லியிருப்பவர் பி.ஜே.பி. மத்திய ஆட்சியில் அமைச்சராக இருக்கும் முக்தர் அப்பாஸ் நக்வி.

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிவது என்பார்களே, அது இதுதான். பாபர் மசூதியை இடித்தது பயங்கரவாதம் இல்லையா?

அப்படிப்பட்ட ஒரு கட்சி யில் முஸ்லிமாக இருக்கக் கூடிய ஒருவர் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்பதற்காக இப்படியெல்லாம் உளறலாமா?

நிலைக் கண்ணாடிமுன் நின்று கொண்டு ஒரு தடவை தன் முகத்தைப் பார்க்கட்டும் அப்பாஸ் நக்விகள்!

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறார்! (2)

மியான் மாவிலி ருந்து இந் தியாவை நாடிவரும் ரோஹிங் கயா முஸ்லிம் மக்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி ‘இந்து' நாளிதழில் எழுதியுள்ளார்.

இதற்கு மத்திய உள் துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் அவர்கள் முஸ்லிம்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner