எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ராய்பரேலி, செப்.28 கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, குடும்ப தலைவரின் மாத வருமானம், 15 ரூபாய் என, வருவாய் துறை அதிகாரிகள் வருமான சான்றிதழ் வழங்கியது, சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது.

இங்கு, ராய்பரேலி மாவட் டத்தில் வசிப்பவர், ஜாகேலால். இவருக்கு சொந்தமாக, 50 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்தும், அருகில் உள்ளஒருநிறுவனத்தில்பணி புரிந்தும் குடும்பத்தை பரா மரித்து வந்தார்.

ஜாகேலாலின் மகன், சஞ்சித் குமார், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண் ணப்பத்துடன், தந்தையின் வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும் என்பதால், வருவாய் துறை அலுவலகத்தில் விண் ணப்பித்தார்.

வட்டாட்சியரின் ஒப்புதல்

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வருவாய் துறை எழுத்தர், ஜாகேலாலின் மாத வருமானம் 15 ரூபாய் என்றும், ஆண்டு வருமானம், 180 ரூபாய் என்றும் பரிந்துரைத்து, வட்டாட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். பரிந்துரையை படிக்காமல், வட்டாட்சியரும் சான்றிதழ் வழங்க ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, வருமான சான்றிதழ் தயாரிக்கப்பட்டு, வட்டாட்சியரின் ஒப்புதல் கையொப்பத்துடன் ஜாகேலா லுக்கு வழங்கப்பட்டது. இந்த வருமான சான்றிதழ், வருவாய் துறை எழுத்தர் மற்றும் வட் டாட்சியரின் அலட்சிய போக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இதுகுறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, ‘பிரின்டிங்கில் ஏற்பட்ட பிழை’ என்று கூறி னார். பின், அந்த வருமான சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, ஜாகேலாலுக்கு புதிய வருமான சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner