எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரா, செப்.28 தசரா விழாக்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோருக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்ஓம்வீர்சரஸ் வத் என்பவர் கடிதம் எழுதி யிருக்கிறார்.

அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமாயணத்தில் இலங்கை யின் அரசராக ராவணன் சித் திரிக்கப்பட்டுள்ளார். அவரது உருவ பொம்மைகள் தசரா விழாக்களில் எரிக்கப்படுவது, அந்தசமூகத்தினரையும்,அவரை வணங்கிவரும் பிற சமூகத்தின ரையும் இழிவுப்படுத்துவதற்குச் சமம்.

மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சவுரில்ராவணனுக்குமிகப் பெரிய சிலை நிறுவப்பட்டுள் ளது. தலைநகர் டில்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டா வில் அவருக்குக் கோயில் உள்ளது.ராவணனைபெரும் பாலானவர்கள் வணங்கி வரு கின்றனர். தசரா விழாக்களில் ஏராளமானவர்கள் திரள்வதால் நெரிசலில் சிக்கியும், ராவ ணன் உருவ பொம்மை எரிக் கப்படும்போது தீ விபத்துகளும் ஏற்பட்டு கணிசமானோர் உயி ரிழக்க நேர்கிறது. எனவே, ராவணன் உருவ பொம்மைகள் எரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அதில் ஓம்வீர் சரஸ்வத் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித் யநாத் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தை ஓம்வீர் அனுப்பினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner