எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அசாம்ஆளுநராகப்பணி யாற்றியவர், தற்போது மேகால யாவின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்து வரும் பார்ப்பனர்தான் (புரோகித்) பன்வாரிலால் புரோகித்.

மராட்டியரான இவர் 1940 ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்தார். அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றார். 1978 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் இணைந்து நாக்பூர் சட்டமன்றத் தொகுதியில்போட்டியிட்டு வென்று, மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் ஊரக வளர்ச் சித் துறை அமைச்சராக இருந் தார். அதன் பிறகு நாக்பூர் நாடா ளுமன்றத் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு இருமுறை மக்களவை உறுப்பினரானார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான். இதற்கு முன்பே 1989 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த பாலா சாகிக் தியோராசுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காங்கிரசில் இருந்தபடியே தாம்கலந்துகொண்டகூட்டத் தில்சிலாநியாஸ்(ராமர்கோவில்) அடித்தளப் பணிகளுக்காக பூசை கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று பிற்காலத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்தான் இவர்! ராமன் பிறந்த இடத்தில் தான் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று முழக்கமிட்டவரும் இவர் தான்.

1999 ஆம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்தார். அந்த ஆண்டு பிரமோத் மகாஜனுடன் நடந்த சில கசப்பான நிகழ்வுகள் காரணமாக, பா.ஜ.க.வில் இருந்து விலகி விதர்பா ராஜ்ய கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்தார். ஆனால், அந்தக் கட்சி பெரிய அளவு இவருக்குக் கைகொடுக்காத கார ணத்தால், மீண்டும் 2009 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அதே ஆண்டு பா.ஜ.க. சார்பில் நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு இவர் தேர்தல் அரசியலை விட்டு விலகிவிட்டார்.

1911 ஆம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலேவால் தொடங் கப்பட்டஇந்துத்துவ சேவா என்ற பத்திரிகையின்தலைமைப் பொறுப் பாசிரியராகவும் இருந் தவர்.

இவரைத் தேடிப் பிடித்துதான் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அனுப்பி வைத்துள்ளது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தலைமை. கட்சித் தாவல் என்பது இவருக்கு இயல்பாக இருந்தாலும், காங்கிரசில் இருந்துகொண்டே ராமர் கோவில் கட்டும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்ற ஒன்று போதாதா - இவ ரைப்பற்றி அய்யந்திரிபறத் தெரிந்துகொள்ள?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner