எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, செப்.30 மத்தியில் ஆளும், பா.ஜ.,வை, அதன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா எழுதிய கட்டுரை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த கட்சி வலி யுறுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரநிலை மையை விமர்சித்து, பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காசமீபத்தில்ஒருகட்டுரை எழுதியிருந்தார்.இதுஅரசிய லில் பெரும் புயலை ஏற் படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

கட்சித் தலைமைக்கு எதி ராக பேசுவதற்கு, பா.ஜ.க. தலைவர்கள் பயப்படுகின்றனர் என யஷ்வந்த் சின்கா கூறி யுள்ளார். இது ஆபத்தில் முடி யும்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கருத்து கூறியபோது அவர்களது வாய்களை, மத்திய அரசு அடைத்து விட்டது.

பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தைரியமாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அது உண்மையில்லை என்றால், அதை,பா.ஜ.க. நிரூபிக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கூட்டணி கட்சியான சிவ சேனாவின் இந்த கடுமையான விமர்சனம் பா.ஜ.க. மேலிடத் துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner