எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘ஊன்றிப் படித்து உண்மை உணர்க!’  ‘‘தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போகவேண்டுமா?’’  என்ற முக்கிய தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘விடுதலை’யில் நேற்று (29.9.2017) எழுதப்பட்ட அறிக்கையைப் படித்திருப்பீர்கள்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்தக் காலகட்டத்தில் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்குப் பல தளங்களிலிருந்து வரவேற்புகள், பாராட்டுகள் குவிந்துகொண்டு இருப்பது நல்ல அறிகுறி!

இதனை வீடு வீடாக, கடை கடையாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு நமது கடமையல்லவா!

தலைமைக் கழகத்தில் துண்டறிக்கைகள் தயார்!

வரும் 4.10.2017 முதல் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் முதற்கட்டமாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தொடர்பு கொண்டு உடனடியாக ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1000 துண்டறிக்கைகளுக்கு ரூ.300/- மட்டுமே!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner