எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஸ்ரீரங்கநாதரையும், சிதம் பரம்  நடராஜனையும் பீரங்கி வைத்துத் தகர்க்க வேண்டும் என்று கூறியவர் கருணாநிதி என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்‘துக்ளக்‘இதழில் (4.10.2017, பக்கம் 25) குறிப் பிட்டுள்ளார்.

இந்தக் கருத்து சிறந் ததுதான். ரங்கநாதன் கடவு ளுக்கும், நடராஜக் கடவுளுக் கும் பூணூல் போட்டுவிட்ட பிறகு - நடராஜன் அசுரனைக் (அசுரன், தஸ்யூக்கள், அரக் கர்கள், குரங்குகள் என்று கூறப்பட்டுள்ளோர் எல்லாம் திராவிடர்கள் என்று  விவே கானந்தர் வரை கூறியது தான்; ஆதா ரம்வேண்டுமா? சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரை களும் - இராமாயணம் எனும் தலைப்பில், பக்கம் 587-589)) காலில் போட்டு மிதிக்கும் நிலையில், பாதிப்புக்கு ஆளான மக்கள் பீரங்கி வைத்துப் பிளக்கவேண்டும் என்று கருதுவது தன்மான உணர்வு தான். இடிப்பது குற்றம் என்றும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகை யறாக்கள் கூறமாட்டார்கள். 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்த மகானு பவர்கள் ஆயிற்றே அவர்கள்.

இன்னும் சொல்லப் போனால் கொலைப் புகழ் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ் வதியும்கூட இடிப்புக்கு ‘ஜிந்தா பாத்’ கூறுபவர்தான்.

‘‘அயோத்தியில் கட்ட டத்தை (கவனிக்கவும், கட்டட மாம் - முஸ்லிம்களின் வழி பாட்டுத் தலம் அல்லவாம்!) இடிப்பது கிரிமினல் நட வடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச் சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை. (ஆதாரம்கூட அவாள் ஏடுதான் -‘தினமணி’, 27.11.2000, பக்கம்1) என்று கூறியவர் சாட்சாத் அவா ளின் லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதியே!

நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன்னாலான புத்தர் சிலையைத் திருடி அது கொண்டு சிறீரங்கத்துக் கோவி லுக்கு மதிற் சுவர் எழுப்பினார் திரு மங்கை ஆழ்வார் என்று தஞ்சை வாணன் கோவை கூற வில்லையா!

அவ்வாறு அவர் செய்த போது கடவுட்டன்மை கொண்டவராக இருந்ததால், அதனைக் குற்றஞ் சொல்பவர் யாருமிலர் என்ற வக்காலத்து வேறு.

அதெல்லாம் சரி, சிறீரங்க நாதரையும், சிதம்பர நடராஜ ரையும் பீரங்கி வைத்துத் தகர்க்க வேண்டும் என்று கலைஞர் கூறியதாகக் குரு மூர்த்தி அய்யர்வாள் எழுதி இருக்கிறாரே - அதற்கு ஆதா ரம் உண்டா? எங்கே சொன் னார் - எதில் இருக்கிறது என்று சொல்ல முன்வருவாரா? சவால் விட்டுக் கேட்கிறோம்!

பார்ப்பனர்களுக்குப், பொய் சொல்லுவதுதான் பால் பாயாசமாயிற்றே! சாணியைப் பிடித்து வைத்து சாமி என்ப வர்கள் ஆயிற்றே!

குருமூர்த்தி அய்யர்கள் மட் டும் விதிவிலக்கா?

- மயிலாடன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner