எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், அக்.1 குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக் கொடியை தாய் சாப்பிடும் மூடநம்பிக்கை வெளிநாடுகளில் பரவி வரு கிறது. இதை சாப்பிடுவதால் தாய்க்கும், குழந்தைக்கும் பல் வேறு பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஆக் ஸிஜன், உணவு ஆகியவற்றை எடுத்துச் செல்வது நஞ்சுக் கொடியின் வேலை. இது, இதர நச்சுப்பொருட்கள் கருவை பாதிக்காமலும் பாதுகாக்கிறது. சில மிருகங்கள் குட்டியை ஈன்ற பிறகு வெளிப்படும் நஞ்சுக் கொடியை சாப்பிடுவது வழக் கம். இதேபோல் குழந்தை பெற்ற பெண்ணும், தனது நஞ் சுக் கொடியை சாப்பிட்டால், குழந்தை பேற்றுக்குப்பின் ஏற் படும் மன அழுத்தம் குறையும், உடலில் சக்தி அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையை யாரோ பரப்பி விட்டுள்ளனர். இதை சில பிரபலங்களும் அங்கீகரித்ததால், இந்த நடை முறை மேலை நாட்டு மக்களி டையே தற்போது பரவத் தொடங் கியுள்ளது. நஞ்சுக் கொடி பல வகைகளில் உட்கொள்ளப்படு கிறது. பச்சையாக, சமைத்து, வறுத்து, உலர வைத்து, வழு வழுப்பான உணவுப் பொருட் களில் வைத்து, பானங்கள் மூலமாகவும், கேப்சூல் வடிவி லும் சிலர் உட்கொள்கின்றனர். கேப்சூல் மாத்திரை வடிவில் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

இந்த நஞ்சுக் கொடியை சாப்பிடும் வகையில் தயார் செய்து கொடுப்பதற்காகவே சில நிறுவனங்கள் 200 அமெரிக்க டாலர் முதல் 400 டாலர் வரை வசூலிக்கின்றன. நஞ்சுக் கொடியை தாய்மார்கள் சாப்பிடுவது நல்லதா, பாதிப்பா என்ற ஆய்வில் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வீல்கார்னல் மருத்துவ மய்யத்தைச் சேர்ந்த மகப்பேறு வல்லுநர் தலைமையிலான குழுவினர் ஈடுபட் டனர். அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், நஞ்சுக் கொடியை தாய் சாப்பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை. இதனால் மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை பெறும் தாய்மார்களை எச்சரிக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.

மருத்துவர் அமாஸ் குரு னேபாம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பெறும் தாய்மார்கள், நஞ்சுக் கொடியை வீட்டுக்கு எடுத்துச் செல்ல தாருங்கள் என கேட்பது அதிகரிக்கிறது.  நஞ்சுக் கொடியை சாப்பிடுவதால், உடலுக்கு தீங்கு ஏற்படுவது தான் உண்மை. அதனால் அதை சாப்பிட வேண்டாம். நஞ்சுக் கொடியை கேப்சூல் வடிவில் சாப்பிடுவதன் மூலம் தாய்பால் கெட்டு போகிறது என்பதும், இதை குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி பி ஸ்ட்ரெப்டேகோக்கஸ் என்ற பாதிப்புக்கு ஆளாவதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யம் கண்டுபிடித்தது.

மேலும், ஜிகா காய்ச்சல், மஞ்சள் காமாலை மற்றும் எச்.அய்.வி போன்ற பாதிப் புகள் ஏற்பட்டால், அதை நீக்குவதும் கடினம். குழந்தை பெறும் பெண், நஞ்சுக் கொடியை சாப்பிட்டதாக நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்களில் இடம் பெற் றுள்ளது. இதை பிரபலங்கள் தற்போது அங்கீ கரித்ததால், இந்த நடைமுறை வேகமாக பரவி வருகிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner