எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

விசாகப்பட்டினம், அக்.1  கருநாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படு கொலையைக் கண்டித்து விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திக சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

பேராசிரியர் மஞ்சுளா, பேராசிரியர் கே.பி.சுப்பாராவ், டி.சிறீராமமூர்த்தி, பி.வி. ரமணா, ஒய்.நூகா ராஜூ, அஜய் சே, ரவி.ஜே, லாசரஸ், ராம்பிரபு, என்.பி.மூர்த்தி, வி.எஸ்.கிருஷ்ணா, ஷியாமளா ஜாகிலங்கி, சுவப்னா, பி.மோகன் ராவ், பி.ராமு, ஜே.வி.ஜி.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய நாத்திக சங்கம் மற்றும் இந்திய அறிவியல்  மாணவர் கூட்டமைப்பின் நிறு வனர் டாக்டர் ஜெயகோபால் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

பெங்களூருவில் பகுத்தறி வாளர், எழுத்தாளர் கவுரி லங் கேஷ் போன்றவர்களைக் கொல்வதன்மூலமாக மதவெறி யாளர்கள் கொடூரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கவுரி லங்கேஷ் எழுத்தாள ராக மத சகிப்பின்மை, கலவ ரங்கள், மூடநம்பிக்கைகள் குறித்த புத்தகங்களை மட்டு மல்லாமல், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பகுத்தறிவாளர்களை தொல் லைப்படுத்திவருவது குறித்தும் எழுதியவர் ஆவார். அது மட்டு மல்லாமல், கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக சமூக நல் லிணக்கம், மற்றும் ஒற்றுமைக் காகப் போராடி வந்துள்ளார்.

மத வெறியர்களால் அவர் தொடர்ச்சியான அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வந்தபோதி லும், அவர் நிலைகுலையாமல், தொடர்ச்சியாக தமது செயல் பாடுகள்மூலமாக சமூக விழிப் புணர்வை ஏற்படுத்திவந்தார். கடைசியில் அவருடைய கொள் கைகளுக்காகவே அவர் உயி ரையும் தியாகம் செய்துள்ளார்.

5.9.2017 அன்றிரவு 8 மணி யளவில் அவர் வீட்டின் முன்பாகவே அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்களை பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் கண்டித்துவருகின்றனர்.

குறிப்பிடத்தக்க பத்திரிகை யாளராக, விமர்சகராக, பொது மக்களிடையே தம் கருத்தை பேசுபவராக இருந்த வந்த கவுரி லங்கேஷ் படுகொலையை இந்திய நாத்திகர் சங்கம் வன் மையாகக் கண்டிக்கிறது.

கருநாடக மாநில முதல்வர் சித்தாராமையா மற்றும் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்வர்களிடமும் நாங்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆகவே, கொலையாளிகளை உடனடி யாகப் பிடிப்பதற்கான நட வடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கருநாடக மாநில முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.


இந்நாள்... இந்நாள்...
1994 -        சென்னையில் அன்னை மணியம்மையார் சிலை திறப்பு
2000 -     டில்லி பாம்னோலியில் பெரியார் மய்யம் திறப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner