எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, அக்.1 கோவையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட மக்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்துவார்களாம். மலர் அங்காடியில்  உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனராம். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஆனாலும் அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை ஒற்றி வைத்துக் கொண்டு, தொடர்ந்து "வேசுக்கோ...தீசுக்கோ..." என்று ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது இந்த பக்தர்களின்  நம்பிக்கையாம். பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner