எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 2- மதுவிலக்கு கோரி காங்கிரசு மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று மேற்கொள்ளும் நடைப் பயணத்தை தமிழர் தலைவர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்திய நதிகளில் 69 விழுக்காடு தண்ணீர் வீணாவதை தடுக்க, நதிகளை இணைக்கவும், மதுவால் மக்கள் வீணா வதை தடுக்கவும் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் இன்று (2.10.2017) காலை 10.30 மணிக்கு சென்னை காமராசர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலையிலிருந்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்.

முன்னதாக இப்பயண தொடக்க நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று குமரி அனந்தன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து நடைப்பயண கொடியை அசைத்துத் தொடங்கி வைத்தார்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கவிஞர் கனிமொழி, காங்கிரசு கட்சித்தலைவர் சு.திருநாவுக்கரசர், மேனாள் காங்கிரசு கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் டாக்டர் ஜெயக்குமார், இதயதுல்லா, தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், கவிஞர் ரவிபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி, முத்துக்குமார் மற்றும் பல்வேறு கட்சித் தலை வர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று குமரி அனந்தன் அவர்களை வாழ்த்தி பயனாடை அணிவித்தனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட  துணைத் தலைவர் மயிலை சேதுராமன், இரா.பிரபாகரன், மயிலை ஆர்.மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner