எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1906ஆம் ஆண்டு லண்டனில் சட்டம் பயின்று வந்த காந்தியார் அப்போது இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் நடந்த ஒரு விருந்திற்கு அழைக்கப்பட்டார்.

அந்த விருந்திற்கு தலைமை தாங்கியவர் தாமோதர் சாவர்க்கர்.

விருந்தின் போது அவர், காந்தியார் அருகில் வந்து அங்கு வைத்திருந்த இறைச்சியை (இறால் வறுவல்/அல்லது தணலில் வேகவைக்கப்பட்டு சிறு துண்டுகளாக ஆக்கப் பட்ட மாட்டிறைச்சி) சாப் பிடக் கூறினார். ஆனால் காந்தியார் "நான் சைவ உணவு பழக்கமுடையவன்; ஆகையால் இறைச்சியை சாப்பிட மாட்டேன்; என்று கூறினார். அதற்குப் பதிலளித்த சாவர்க்கர் "இறைச்சியை தவிர்க்கும் முட்டாள்களால் வெள்ளைக் காரர்களை எதிர்த்துப் போரிட முடியாமல் போகும், இறைச்சி சாப்பிட்டு நல்ல முறையில் உடல்பலம் பெற்றிருந்தால் தான்  ஆங்கிலேயரை நாட்டை விட்டு விரட்ட ஆற்றல் கிடைக்கும்" என்று வெறுப்புடன் கூறினார்.

(Vinayak Damodar Savarkar Dates of time spent in Britain:
3 July 1906 - 1 July 1910)

சாவர்க்கர் கூறும் இந்தக் கூற்றுப்படி பார்த்தால் ஒன்று மட்டும் உறுதியாகிறது இந்துத்துவா என்ற ஒன்றை முதலில் உருவாக்கியவர் சாவர்க்கர் என்று பெருமையுடன் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்கள் மார் தட்டிச் சொல்லுவார்கள்.

இறால் எனும் இறைச் சியை உண்ணாதவர்கள் முட்டாள்கள் என்றால் மாட்டிறைச்சியை, பசுக் கறியை உண்ணக் கூடாது என்று சட்டம் போடுபவர் களை என்னவென்று அழைக்கலாம்? வெகு நேரம் யோசிக்கத் தேவையில்லை! "படு முட்டாள்" என்று தானே சொல்ல வேண்டும்.

சிறப்பாக தங்களை காய்கறி உண்பவர்கள் என்று காட்டிக் கொள் ளும்  பார்ப்பனர்கள் அனைவரையும் சாவர்க்கர் மொழியில் என்ன வென்று அழைப்பது?

சங்கராச்சாரியார்களுக்கு என்ன பட்டம் கொடுக்க லாம்?

அந்த முட்டாள்களே  பதில் சொல்லட்டும்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner