எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கனெக்டிகட், அக்.3 அமெரிக்காவின் கனெக்டி கட்டில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 30.9.2017 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர் சுரேஷ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இனிதே விழா தொடங்கியது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் அய்யா மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அமெரிக்காவில் எந்தெந்த இடங்களில் கொண்டாடப்பட்டது என்பதைப் பற்றியும், ஜெர்மனியில் நடந்த உலக நாத்திகர்கள் மாநாடு பற்றிய செய்திகளையும் தொகுத்து உரையாற்றினார்.

தோழர் சபரீஷ் அவர்கள் தந்தை பெரியாரை எவ்வாறு அறிந்து கொண்டார் என, தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்தது அனை வரையும் கவர்ந்தது.

தோழர் பிரபு இராமகிருட்டிணன் அவர்கள் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பை பவர் பாய்ண்ட் கொண்டு சிறப்பாக வழங்கினார்  . குறைந்த நேரத்தில் காரல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்வையாளர் களுக்கு கொண்டு சேர்த்தது பாராட்டத்தக்கது.

தோழர் சிவப்பிரியா அவர்கள் கேரளத்தை சேர்ந்தவர் எனினும் அழகு தமிழில் நாராயணகுரு மற்றும் தந்தை பெரியார் அவர்களை ஒப்புமைப் படுத்தி வழங்கிய உரை சிறப்பாக இருந்தது. நாராயணகுரு வெளிப்படையாக, தான் ஒரு இறைமறுப்பாளர் எனக் கூறாத காரணத்தால் தான் அவரை இன்று கடவுளாக வழிபடுகின்றனர். அது நாராயணகுருவின் கருத்துக்கு எதிரானது என்றும் அந்த வகையில் தந்தை பெரியார், தான் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதை தெளிவாக எடுத் துரைத்துப் போராடியது அவரின் தனிச்சிறப்பு என்றும் கூறினார் .

தோழர் அஜோய் அவர்கள் ஜியோபாரோடி எனும் விநாடி - வினா நிகழ்வினை வெகு சிறப்பாக நடத்தினார். பெரியார், அம்பேத்கர், இடதுசாரி இயக்கங்கள், அமெரிக்காவில் சமூக நீதி, இட ஒதுக்கீடு என பல தலைப்புகளில்  கேள்விகள் இருந்தன. நம் வாசிப்புப் பழக்கம் இன்னும் எந்தெந்தத் தளங்களில் விரிவடைய வேண்டும் என்று நம்மை விழிப்படையச் செய்தது இந்நிகழ்ச்சி என்றால் மிகையில்லை.

தோழர் வழக்குரைஞர் கனிமொழி அவர்கள் தந்தை பெரியாரின் போராட்டங்கள் குறித்தும், பெண்ணுரிமைக்கு அவரைப் போல் பாடுபட்ட வர்கள் எவரும் இல்லை என்றும், இந்த தமிழ்ச் சமுதாயம் மானமும் அறிவும் பெற வேண்டும் என்பதற்காக உழைத்த அந்த தன்னலமற்ற தலைவரின் தத்துவத்தை இன்று நாம் தூக்கிப் பிடிப்பதே தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்று சிறப்பாக உரையாற்றினார்.

மருத்துவர்  சரோஜா இளங்கோவன் அவர்கள்,  தான் எப்படி மூட நம்பிக்கையில் இருந்து விடு பட்டார் என்பதை எடுத்தியம்பியது சிறப்பாக இருந் தது. அதே போல் பிறரும் மூடத்தனத்தில் இருந்து வெளிவர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

வெகு சிறப்பாக இணைப்புரை வழங்கி உரை களின் நடுவே  திராவிடர் இயக்கங்களின் வர லாற்றை தெளிவுற எடுத்தியம்பினார் தோழர் கார்த்திகேயன் தெய்வராஜன் அவர்கள்.

தோழர் சாக்ரடீஸ் அவர்கள் இறுதியாக நன்றி கூறினார். விழா இனிதே நிறைவுற்றதென்றாலும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் பகிரப்பட்ட கருத்துகள் அனைத்துமே வந்திருந் தோர் அனைவரையும் தந்தை பெரியாரின் தத்துவப் பயணம் என்றும் நிறைவுறாது என்று உறுதியெடுக்கச் செய்தது என்றால் அது மிகையல்ல.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner