எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: கர்நாடகத்தில் பத்திரிகையாளர் கவுரி லிங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பற்றி?

த.சத்தியநாராயணன், அயன்புரம்

பதில்: கவுரி லிங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டது நாடு தழுவிய அளவில் அதிர்ச்சி யையும், எதிர்ப்பையும் தோற்றுவித் திருக்கிறது. கொலையாளி சாமர்த் தியமாக ஹெல்மெட் அணிந்து வந்ததால், அவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஒருவருடைய கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக, அவரை சுட்டுக் கொல்வது என் பது ஒப்புக் கொள்ள முடியாத கொடுஞ்செயல். அதே நேரத்தில் கொலை நடத்தும் அளவுக்கு ஆத்திரத்தைத் தூண்டாத வகையில் எழுத்தாளர்கள் பண்பட்ட எழுத்தைக் கையாள்வது அவசியமாகும்.                     ('கல்கி', 24.9.2017 - பக்கம் 18)

முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை பின்னே பார்த்தால் நாயக்கர்  குதிரை என்று ஒரு சொலவடை உண்டு.

'கல்கி'யின் முதல் பகுதியில் நியாயமாகக் கூறுவதுபோல் கூறிவிட்டு அடுத்த பகுதியில், தன் புத்தியைக் காட்டுவதைக் கவனிக்க வேண்டும்.

கொலை நடத்தும் அளவுக்கு ஆத்திரத்தைத் தூண்டாத வகையில் என்பதற்கு என்ன பொருள்?

அப்படியே ஆத்திரத்தைத் தூண்டினால் கொலை செய்து விட வேண்டுமா? அதனை நியாயப்படுத்துவது சரிதானா?

கவுரி லிங்கேஷ் செய்த தவறு என்ன? மூடநம்பிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதுதானே.

மாட்டுக்கறி பிரச்சினைபற்றிப் பேசினார் - அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை இல்லையா?

மூடத்தனத்தை கண்டித்துப் பேசினால் ஒருவருக்கு ஆத்திரம் வந்து கொலை செய்வது நியாயம் என்பதுதான்  'கல்கி'யின் வாதமா?

குதிரை மீதேறி நீண்ட வாளினால் மிலேச்சர்கள் அனைவரையும் வெட்டிக் குவிக்கும் அவதாரத்திற்குப் பெயர் தானே 'கல்கி' அவதாரம்.

மிலேச்சர்களான கவுரி லிங்கேஷை கொலை செய்வதை நியாயப்படுத்தத்தானே செய்யும்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner